பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியப்படியும், பின்பற கம்பியை பிடித்தப்படியும் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் பல வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல முறை மாணவர்களுக்கு அறிவுறுத்தியும், இதே நிலைமை நீடிக்கிறது.
அதேபோல், வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பள்ளிக்கு் பைக்கில் வரும் மாணவர்களால் விபத்துக்ள் ஏற்படும் நிகழ்வுகளும் தொடர்ந்து. இதனை ஒட்டுமொத்தமாக தடுக்கும் வகையில், பள்ளிக் கல்வித் துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், " வாகன லைசன்ஸ் இல்லாமல் பைக் ஓட்டும் பள்ளி மாணவர்களால் விபத்துகள் அதிகரிக்கின்றன. எனவே, மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு வந்தால் அனுமதிக்க வேண்டாம்.
அதேபோல், பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதும் மாணவர்களிடையே அதிகரித்து வருகிறது. அதனை தடுத்திட, பள்ளி முடிந்தவுடன் மாணவர்களை கும்பலாக ஒரே நேரத்தில் வளாகத்தை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டாம். சுமார் 15 நிமிட இடைவேளியில் தனித்தனி குழுக்களாக மாணவர்களை அனுப்ப வேண்டும்.
மேலும், மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க, குறைவான பேருந்துகள் இயக்கப்படும் தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிக்கு பைக்கில் வர தடை, மாணவர்கள் தனித்தனி குழுக்களாக தான் வெளியே அனுப்ப வேண்டும் போன்ற உத்தரவுகள், மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil