Advertisment

அரசு பள்ளிகளில் 2774 முதுகலை ஆசிரியர் வேலை; தற்காலிக நியமனம்

தமிழக அரசுப் பள்ளிகளில் 2,774 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்; தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பள்ளிகளில் சிறப்புக் குழு; ஆசிரியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க அரசு நடவடிக்கை

School education Dept permits to fill 2774 PG teacher vacancies on Temporary basis: முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு அருமையான வாய்ப்பு. தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. முதுகலை பட்டம் மற்றும் ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

Advertisment

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை 5 மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகும்.

இதையும் படியுங்கள்: SSC MTS 2022; மத்திய அரசில் 3600+ வேலை; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

எனவே இந்தாண்டு பொதுத் தேர்வு எழுதும் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் நலன்கருதி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2774 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வரையில் ஐந்து மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

முக்கிய பாடங்களான தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல் மற்றும் பொருளியல் ஆகிய 11 பாடங்களுக்கு மட்டுமே மாதம் 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்பி கொள்ள வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட உடன் இவர்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

அதேநேரம் பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல, தற்காலிகமானதே என்று பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தி கூறியுள்ளது. மேலும், பகுதி நேர ஆசிரியர்கள் முன்னறிவிப்பின்றி எந்த நேரத்திலும் பணிநீக்கம் செய்யப்படலாம். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க இயலாது என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment