சந்திராயன்-3 ராக்கெட் ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஜூலை 14ஆம் தேதி சந்திரயான் -3 விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் ஹனிஷ்கா என்ற, 11 வயது மாணவி கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
Advertisment
பள்ளி மாணவி கடிதம்
அந்தக் கடிதத்தில், “கடந்த வாரம் செய்தித்தாளில் சந்திரயான்-3 செயற்கைகோள் ஜூலை 14 தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக செய்தியை படித்தேன்.
சந்திரயான்- 3 விண்ணில் வெற்றிகரமாக செல்ல என்னுடைய வாழ்த்துகள். இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் எங்களது பள்ளியின் சார்பாக பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“