பள்ளிகள் திறப்பு எப்போது? பெற்றோர் கருத்தை கேட்கும் மத்திய அரசு

school reopening in tamilnadu: பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை 20.07.2020 (திங்கட்கிழமைக்குள்) தெரிவிக்க  வேண்டும்.

By: Updated: July 20, 2020, 10:38:37 AM

Sandeep Singh

கொரோனா ஆபத்துகள் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு விதிகளை  நீட்டித்து வருகின்றன. மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அனுப்பியுள்ள கடிதத்தில்,”பள்ளிகளை மீண்டும் எப்போது திறக்கலாம் (ஆகஸ்ட், செப்டம்பர் அல்லது  அக்டோபர் ) என்பது குறித்து பெற்றோர் மற்றும் பிற தரப்பினருடன் ஆலோசனை நடத்துமாறு குறிப்பிடப் பட்டுள்ளது

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்விச் செயலாளர்களுக்கு  ஜூலை 17 (வெள்ளிக்கிழமை) தேதியிட்டு அனுப்பிய கடிதத்தில்,“பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை 20.07.2020 (திங்கட்கிழமைக்குள்) தெரிவிக்க  வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.

(அ) பள்ளிகள் மீண்டும் திறக்க வசதியாக இருக்கும் காலம் என்ன – ஆகஸ்ட் / செப்டம்பர் / அக்டோபர் 2020;  (ஆ) பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது பெற்றோர்கள் எதிர்பார்ப்பது என்ன?  போன்ற குறிப்பிட்ட இரண்டு கேள்விகளுக்கு பெற்றோரோரிடம் இருந்து அமைச்சகம் பதிலை எதிர்பார்க்கின்றது:

 

 

 

இந்த கடிதம் வெள்ளிக்கிழமை, மூலம் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதாக  துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்திய நிலையில், பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை  செயலாளரை மின்னஞ்சல், எஸ்எம்எஸ், தொலைபேசி அழைப்பு ஆகியவை மூலம் தொடர்பு கொள்ள முடியவில்லை.

பெற்றோரின் கருத்துக்களை பெறுவதற்கான காலக்கெடு திங்கள்கிழமை என நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பல பள்ளிகள் இதைப் பற்றி இன்னும் அறிந்திருக்கவில்லை.

டெல்லியில் செயல்படும் ஒரு கேந்திரியா வித்யாலயா பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோரிடம் கருத்து கேட்பது குறித்து  தனக்கு எந்த அஞ்சலும் வரவில்லை என்று கூறினார். எவ்வாறாயினும், இரண்டு வாரங்களுக்கு முன்பு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில், தற்சமயம் பள்ளிகளை செயல்படுவதில் பெருவாரியான பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லை என்ற தெரிவிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

உத்தரபிரதேச மாநில கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இதுபோன்ற எந்தக் கடிதத்தையும் நான் அறிந்திருக்கவில்லை. இருப்பினும், இந்த மாதத்தின் முதல் வாரத்தில் பள்ளிகளை மீண்டும் செயல்பட அனுமதிப்பது குறித்து பெற்றோரிடமிருந்து கருத்துக்களைப் பெற்றோம். அதில், 80 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர்கள் தற்சமயம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயாராக இல்லை என்பதைக் கண்டறிந்தோம். நாங்கள் கடிதத்தைப் பெற்றவுடன், பெறப்பட்ட  தகவல்களை அனுப்பி வைப்போம்,” என்று தெரிவித்தார்.

உள்துறை அமைச்சகம் ஜூன் 29 அன்று அறிவித்த அன்லாக் -2 வழிகாட்டி நெறிமுறைகளில், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஜூலை 31 வரை மூடப்படும் என்று தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:School re opening decision mhrd seeks parents feedback

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X