scorecardresearch

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு: அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு

தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

anbil mahesh

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற அடுத்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதை பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பின் படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜூன் 5-ந் தேதியும், 6 முதல் பிளஸ்-2 வரையான வகுப்புகளுக்கு ஜூன் 1-ந் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதைப்பற்றி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

“தற்போது கோடை வெயில் அதிகமாக தெரிவதால் பள்ளிக்கூடங்கள் திறப்பதை மாற்றி அமைக்க ஆலோசனை நடத்தினோம்.

ஜூன் 5 அல்லது 7 ஆகிய தேதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சரிம் ஆலோசனை கேட்கப்பட்டது.

ஆலோசனையின் அடிப்படையில் கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் ஜூன் 7-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படும்”, என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: School reopen date postponed anbil mahesh announcement