Advertisment

கொளுத்தும் வெயில்: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஜூன் 12க்கு தள்ளிவைப்பு

6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை வரும் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
Jun 05, 2023 08:52 IST
Tamil news

Puducherry schools reopen postpone

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருவதால் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதன்படி, 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை வரும் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டு மார்ச் மாத தொடக்க்கத்தில் இருந்தே பல இடங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. எப்போதும் மே மாதம் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் வழக்கமாக வெப்பம் குறையும். ஆனால், இந்தாண்டு அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது.

எப்போதும் கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புக்கு, ஜூன் 1 ஆம் தேதியும், பள்ளிகள் திறப்பதாக தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

ஆனால் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வெயிலின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால், பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைப்பது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு மீண்டும் பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பதாகவும்,அதன்படி, 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Education #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment