பல மாநிலங்களில் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு: தமிழகத்தின் நிலை என்ன?

school reopening date in chennai 2020: கொரோனா பரவல் ஏற்பத்தும் ஆபத்தை மனதில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்  முன்பு கூறியிருந்தார்.

School Reopening News
School Reopening News

school reopening date in tamilnadu : 29, ஜூலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட 3-ம் கட்ட தளர்வுகள் தொடர்பான  வழிமுறைகளில், ” மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களுடன் நடத்திய விரிவான ஆலோசனை அடிப்படையில், 2020 ஆகஸ்ட் 31-ம் தேதி முடிய பள்ளி, கல்லூரி, பயிற்சி நிலையங்கள் மூடப்படுவதாக” அறிவித்தது.

தற்போது, புது டெல்லி, தமிழ்நாடு,மும்பை உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கும் என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. கொரோனா பரவல் ஏற்பத்தும் ஆபத்தை மனதில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்  முன்பு கூறியிருந்தார்.

2020-21 கல்வியாண்டில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான மாநில அரசுகள்  மேற்கொண்டு வரும் நடவடிக்கையை பல பெற்றோர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன., புது டெல்லி பெற்றோர்கள் சங்கம் கடந்த மாதம் மனிதவள மேம்பாட்டு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில்,“ கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக் கணக்காக இருந்த நிலையில், பள்ளிகள் அனைத்தும் மூடப்படுவதாக மத்திய அரசு மார்ச் 16 அன்று உத்தரவிட்டது. ஆனால, தற்போது ​​கொரோனா பாதிப்பு 10 லட்சத்தை   தாண்டிவிட்டது … இந்த சூழ்நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும் என்ற நினைப்பே நகைப்புக்குரியது, ”  என்று தெரிவித்தது. அடுத்த ஆண்டு வாரிய தேர்வுகளை ஆன்லைனில் நடத்தவும் பெற்றோர் சங்கம் தனது கடிதத்தில் பரிந்துரைத்தது.

அசாம், ஆந்திரா, மேற்கு வங்கம், கோவா போன்ற மாநிலங்கள் செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. சமூக இடைவெளியுடன் கூடிய திறந்த வகுப்பறை, 33% ஊழியர்கள், வகுப்பு ரீதியாக மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்தல்,  போன்ற புதிய நடைமுறையின் கீழ் பள்ளிகள் செயல்படும் என்று தெரிய வருகிறது. .

செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு தயாராகுங்கள் என்று ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இருப்பினும், அந்த உத்தரவில், ” செப்டம்பர் 5ம் தேதிக்குள் இயல்பு நிலைமை திரும்பும் என்று நம்புகிறேன், ” என்று தெரிவிக்கப்பட்டது.

ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படும் செப்டம்பர் 5ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க மேற்கு வங்க மாநில அரசு யோசித்து வருகிறது. ஆகஸ்ட் 31 க்குப் பிறகு நிலைமை மேம்பட்டால், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை செபடம்பரில் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார்.

முன்னதாக, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை திறப்பது குறித்து பெற்றோர்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியோருடன் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தி முடிவுகளை தெரிவிக்க மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

செப்டம்பர் 1 முதல்  மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படலாம் என்று அசாம் மாநில கல்வி அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா  தெரிவித்தார். இந்த முடிவின் கீழ், ”  5 முதல் 8 வகுப்புகள் திறந்த வெளியிலும், 9 முதல் 12 வகுப்புகள் ஷிபிட் முறையில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.

கோவாவும் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் புதிய கல்வி அமர்வைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதைத் தொடர்ந்து,  இந்த ஆண்டு இறுதியில் பள்ளி,கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களைத் திறக்க தேசிய தலைநகர் உட்பட பிற மாநிலங்கள் முடிவு எடுத்திருப்பதாக அறிய முடிகிறது.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைசச்சர்  செங்கோட்டையன் ,” கொரோனா பரவல் தொற்று குறைந்துவந்தாலும் பள்ளிகள் திறப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழ்நிலை இருந்துகொண்டிருக்கிறது. மீண்டும் மக்களுடைய கருத்துகளை அறிந்து செயல்படுத்துவது என்பது அரசினுடைய முடிவாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, 5-ம் வகுப்பு வரையிலான மாற்றுக் கல்வி திட்ட அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் வெளியிட்டுள்ளார். கோவிட் தொற்று காலத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன் பெறும் நோக்கில் கல்வி பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் மற்றும் பள்ளி முதல்வர்கள் இணைய வழி முறையில் கல்வி பயிலுதவற்கு இந்த பாடத் திட்டம் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Schools reopening date when are schools re opening school reopening announcement in september

Next Story
பட்டதாரிகளுக்கு எஸ்.பி.ஐ-யில் வேலை: மிஸ் பண்ணாதீங்கsbi savings account interest sbi savings account sbi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com