10, 12-ம் வகுப்பு பள்ளித் திறப்பு- முதல்வர் முக்கிய அறிவிப்பு

Tamil nadu schools reopening date: மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி முடிவு எடுக்கப்படும்’ என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Tamil nadu schools reopening date: மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி முடிவு எடுக்கப்படும்’ என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

author-image
WebDesk
New Update
School Reopening News

School Reopening News

Tamil Nadu Schools Reopening Date: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்பு வெளியிட்டார். அக்டோபர் 1 முதல் மாணவர்கள் பள்ளிக்கு வந்து சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என அண்மையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படுவதாகவும் முதல்வர் குறிப்பிட்டார்.

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்டம்பர் 29) காணொலிக் காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பொது முடக்கம் தளர்வுகளுக்குப் பிறகு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அவர் கேட்டறிந்தார்.

பொதுப் போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள் அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு சென்று சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என கடந்த 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. அந்த அரசாணை நிறுத்தி வைக்கப்படுவதாக முதல்வர் இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

‘மேல்நிலை வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறித்து இன்று மாலை மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மாணவர்கள், பெற்றோர் நலன் கருதி முடிவு எடுக்கப்படும்’ என முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Advertisment
Advertisements
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

Edappadi K Palaniswami School Education Department

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: