scorecardresearch

SIDBI Bank Jobs: வங்கி வேலை; 100 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் 100 உதவி மேலாளர் பணியிடங்கள்; இன்ஜினியரிங், முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

SIDBI Bank Jobs: வங்கி வேலை; 100 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்தியா சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) உதவி மேலாளர் கிரேடு ‘ஏ’ (Assistant Manager Grade ‘A’) அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 100 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: TNPSC வேலை வாய்ப்பு; மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிங்க!

உதவி மேலாளர் (Assistant Manager Grade ‘A’ )

காலியிடங்களின் எண்ணிக்கை: 100

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Post-Graduation Degree in any discipline (Preferably from Commerce / Economics / Management subject) OR Bachelors’ Degree in Law / Bachelors’ Degree in Engineering (Preferably Civil / Electrical / Mechanical) OR CA / CS / CWA / CFA / CMA OR Ph.D. முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 14.12.2022 அன்று 21 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்: தோராயமாக ரூ. 70,000

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1100 ஆகவும், SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.175 ஆகவும் உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழித் தேர்வு:

இந்தத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability), பொது அறிவு அல்லது வங்கி தொடர்பான கேள்விகள் (General/ Financial Awareness) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம்.

அடுத்து 50 மதிப்பெண்களுக்கு விரிவான விடையளித்தல் முறையில், அதாவது கட்டுரை அல்லது கடிதம் எழுதுதல் தேர்வு நடைபெறும். இதற்கான கால அளவு ஒரு மணி நேரம்.

இதில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் நேர்முகத் தேர்வு நடைபெறும். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.sidbi.in/en/careers/sidbi-invites-applications-for-recruitment-of-officers-in-grade-a-general-stream-2022 அல்லது https://ibpsonline.ibps.in/sidbiamdec22/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sidbi.in/files/careers/SIDBI_Officers_GR’A’_General_Stream_2022.pdf என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Sidbi recruitment 2022 for 100 grade a officers vacancies apply online