இந்தியா சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் (SIDBI) உதவி மேலாளர் கிரேடு ‘ஏ’ (Assistant Manager Grade ‘A’) அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 50 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
உதவி மேலாளர் (Assistant Manager Grade ‘A’)
காலியிடங்களின் எண்ணிக்கை: 50
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 08.11.2023 அன்று 30 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.
சம்பளம்: தோராயமாக ரூ. 90,000
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.sidbi.in/en/careers/sidbi-invites-applications-for-recruitment-of-officers-in-grade-a-general-stream-2023 அல்லது https://ibpsonline.ibps.in/sidbioct23/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2023
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.1100 ஆகவும், SC/ST, PWD பிரிவுகளுக்கு ரூ.175 ஆகவும் உள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sidbi.in/files/careers/SIDBI_Officers_GR'A'_General_Stream_2023.pdf என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“