சித்தா, ஆயுர்வேதம், யுனானி படிப்புகளுக்கு ரேங்க் பட்டியல் வெளியீடு! குமரி மாணவி முதலிடம்

நீட் தேர்வில் 520 மதிப்பெண்கள் பெற்ற கன்னியாகுமரி மாணவி டி.எஸ். பிரகதி முதலிடம் பிடித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் ஜி. பாவனா முதலிடம் பிடித்தார்.

நீட் தேர்வில் 520 மதிப்பெண்கள் பெற்ற கன்னியாகுமரி மாணவி டி.எஸ். பிரகதி முதலிடம் பிடித்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் ஜி. பாவனா முதலிடம் பிடித்தார்.

author-image
WebDesk
New Update
neet mbbs seat matrix

Siddha Ayurveda unani Ranking list Tamil Nadu AYUSH admission

சென்னை: சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை நேற்று (செப். 5) மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இதில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி டி.எஸ். பிரகதி முதலிடம் பிடித்தார்.

Advertisment

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்தா, யுனானி மருத்துவக் கல்லூரிகளும், திருநெல்வேலி பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரியும், மதுரை திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியும் இயங்கி வருகின்றன.

இந்த ஐந்து அரசு கல்லூரிகளில் உள்ள 320 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 48 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 272 இடங்கள் மாநில அரசின் வசம் உள்ளன. இது தவிர, 29 தனியார் கல்லூரிகளில் 1,920 இடங்கள் உள்ளன. அதில் 15% அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும், மீதமுள்ள இடங்களில் 65% மாநில அரசிற்கும், 35% நிர்வாக ஒதுக்கீட்டிற்கும் வழங்கப்படுகின்றன.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி வருகிறது. அதேசமயம், அரசு கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 15% இடங்களுக்கு மத்திய அரசு கலந்தாய்வு நடத்துகிறது.

Advertisment
Advertisements

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று தகுதியானவர்களின் தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இந்த நிகழ்வில் துறைச் செயலர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://tnhealth.tn.gov.in/) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 4,371 பேர் இடம்பிடித்துள்ளனர்.

இதில், நீட் தேர்வில் 720-க்கு 520 மதிப்பெண் எடுத்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி டி.எஸ். பிரகதி முதலிடம் பிடித்தார். 512 மதிப்பெண்களுடன் ஜி.டி. இனிய சுதர்சன் இரண்டாம் இடத்தையும், 509 மதிப்பெண்களுடன் ஆர். பாவேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,430 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான பட்டியலில் 1,860 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

மொத்தமுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 97 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தரவரிசைப் பட்டியலில் 425 மதிப்பெண்களுடன் ஜி. பாவனா முதலிடத்தையும், 423 மதிப்பெண்களுடன் என். அருண்குமார் இரண்டாம் இடத்தையும், எஸ். அன்பரசி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

Education

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: