Advertisment

சிப்காட் வேலை வாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் அப்ளை பண்ணுங்க!

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் – சிப்காட் வேலை வாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
jobs

அரசு வேலை

தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் எனப்படும் சிப்காட் கால்நடை நிறுவனத்தில் முதுநிலை திட்ட மேலாளர் மற்றும் பட்டய கணக்காளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 20.03.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை. வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

Chief Project Manager

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : இன்ஜினியரிங் அல்லது மேலான்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 15 வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : பிற அரசு துறை நிறுவனங்களில் பதவி நிலைக்கு ஏற்ப வழங்கப்படும்

Chartered Accountant

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி : CA/ICAI படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ஆண்டுக்கு ரூ. 12 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sipcot.tn.gov.in/webroot/img/Notification_Chief_Project_Manager.pdf அல்லது https://sipcot.tn.gov.in/webroot/img/Notification_Chartered.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : hrd@sipot.in  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.03.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sipcot.tn.gov.in/webroot/img/Notification_Chief_Project_Manager.pdf அல்லது https://sipcot.tn.gov.in/webroot/img/Notification_Chartered.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment