டி.என்.பி.எஸ்.சி தேர்வர்களுக்கு சூப்பர் சான்ஸ்; குரூப் 4 - வி.ஏ.ஓ தேர்வுக்கு இலவச பயிற்சி; எங்கு தெரியுமா?

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்டு வருகின்றன. பாடவாரியான பயிற்சித் தேர்வுகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்; கலந்துக் கொள்ள தேர்வர்களுக்கு அழைப்பு

author-image
WebDesk
New Update
tnpsc group iv recruitment, tnpsc group 4 recruitment, டி.என்.பி.எஸ்.சி., tnpsc group 4 notification, tnpsc civil services exam, tamil nadu public service commission, tamil nadu civil services exam, civil services examination (india), civil services examination, தமிழ்நாடு குரூப் 4 தேர்வு,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,

சிவகங்கை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ (TNPSC Group IV/VAO) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ள குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ தேர்விற்காக சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆஷா அஜித், தெரிவித்தார்.

இந்த தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று, அரசு வேலைவாய்ப்பில் சேர்ந்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

இந்தநிலையில், TNPSC Group IV/VAO தேர்வுக்கான அறிவிப்பு 25.04.2025 அன்று வெளியிடப்படும். தேர்வு 13.07.2025 அன்று நடைபெறும்.

இதனையடுத்து, இதற்கான பயிற்சி வகுப்புகள் 02.01.2025 முதல் தொடங்கி சிறந்த பயிற்றுநர்களின் வழிகாட்டுதலுடன் நடத்தப்பட்டு வருகின்றன. பாடவாரியான பயிற்சித் தேர்வுகள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.

தன்னார்வ பயிலும் வட்ட நூலகம் மூலம் பாடப்புத்தகங்கள் மற்றும் www.tamilnaducareerservices.tn.gov.in இணையதளத்தில் முந்தைய வினாத்தாள்கள் கிடைக்கும்.
பதிவு செய்ய: https://tinyurl.com/tnpscgroup4coachingsvg என்ற Google Form-ல் பதிவு செய்யலாம். அல்லது சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்யலாம்.

மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டு அரசு வேலைவாய்ப்பு பெற பயன்படுத்திக்கொள்ள சிவகங்கை  மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், அறிவுறுத்தியுள்ளார்.

Tnpsc Group4 Jobs Sivagangai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: