Advertisment

பழைய பொருளுடன் எடைக்கு போடப்பட்ட 10-ம் வகுப்பு விடைத்தாள்கள்: அரவைக்கு முன் மீட்ட ஆசிரியர்கள்; சிவகங்கையில் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பழைய பொருட்களுடன் 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் எடைக்கு போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
sivagangai manamadurai KALKURICHI Govt Higher Secondary school 10th class answer papers weighted with old material Tamil News

எடைக்கு போன 10ம் வகுப்பு விடைத்தாட்கள்; விரட்டிப்பிடித்து திரும்ப பெற்ற ஆசிரியர்கள் - சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிகின்றனர். தற்போது அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. 6 முதல் 8 வகுப்புகளுக்கு டிசம்பர் 9-ல் தேர்வு துவங்கி நேற்றுடன்முடிவடைந்தது.

Advertisment

10 ஆம் வகுப்பிற்கு டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. 10 ஆம் வகுப்பு மாணவர்க ளின் தமிழ், கணிதம், அறிவியல் விடைத்தாள்கள் கடந்த சனிக்கிழமை பழைய பொருட்களுடன் சேர்த்து தவறுதலாக எடைக்கு போடப்பட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் தேடியபோது எடைக்கு போனது தெரியவந்தது.

இதனையடுத்து, மதுரையில் அரவைக்கு செல்லும் முன் விடைத்தாட்களை ஆசிரியர்கள் மீட்டு வந்தனர். இது தொடர்பாக தலைமையாசிரியர் ஆரோக்கியராஜா பேசுகையில், "பழைய பேப்பருடன் தற்போது நடந்த தேர்வு விடைத்தாள்களையும் எடைக்கு போட்டு விட்டனர். இது தெரிந்ததும் மீட்டு வந்து விட்டோம். 9 ஆம் வகுப்பு கணிதம் 28 பேப்பர், 10 ஆம் வகுப்பு கணிதம் 28 என 56 விடைத்தாள்களை திரும்ப பெற்று விட்டோம்" என்று கூறினார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivagangai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment