75% சதவீதம் கட்டாய வருகை தேவை, இல்லையேல்.... சிபிஎஸ்இ அதிரடி
cbse board exam attendance rules : 2020 ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி தேர்வு எழுதயிருக்கும் மாணவர்கள், பள்ளிக்கு 75 சதவிகிதம் கட்டாய வருகை தந்திருக்க வேண்டும்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது சமீபத்திய அறிவிப்பில், இந்த ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கு வரவிருக்கும் மாணவர்களின் வருகையை கணக்கிட பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 2020 ஜனவரி 1ம் தேதி நிலவரப்படி தேர்வு எழுதயிருக்கும் மாணவர்கள், பள்ளிக்கு 75 சதவிகிதம் கட்டாய வருகை தந்திருக்க வேண்டும். இதற்கு குறைவான எண்ணிகையை உடைய மாணவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
எனவே, பிப்ரவரி 15 முதல் தொடங்கும் சிபிஎஸ்இ 10/12 வாரிய தேர்வுகளில் 75% கட்டாய வருகை உட்பட அனைத்து வழிகளிலும் தகுதியுள்ள மாணவர்களுக்கு மட்டுமே அட்மிட் கார்டுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ... மகிழ்ச்சியில் சென்னை !
போதிய கட்டாய வருகை இல்லாத மாணவர்களின் பட்டியல் பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். இறுதி முடிவு ஜனவரி 7 (அ) 8ம் தேதிக்கு முன்னர் எடுக்கப்படும்.
கட்டாய வருகை இல்லாத மாணவர்களின் பின்னால் உண்மையான காரணம் இருந்தால், அவர்கள் ஜனவரி 7ம் தேதிக்குள் தேவைப்படும் ஆவணங்களை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். சுற்றறிக்கையின்படி, எந்தவொரு பெற்றோர் கோரிக்கையும் காலக்கெடுவுக்குப் பிறகு கருதப்படாது.
எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கட்டாய பள்ளி வருகை குறைவாக உள்ளதென்றால், உடனடியாக தேவைப்படும் ஆவணங்களை ஜனவரி 7 (அ) 8ம் தேதிக்குள் சமர்பித்து மாணவர்களை தேர்வு எழுத வைக்குமாறு கேட்டுக் கொல்லபடுகிறார்கள்.