கோவையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முன்மாதிரி மென்பொருள் போட்டியான இந்தியா ஹேக்கத்தான்"2024 எனும் போட்டி தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்" 2024 போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மத்தியில் சிறப்பு உரையாற்றுகிறார்.
மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் நான்கு கருத்துக்களுக்கான மென்பொருள்கள் வடிவமைப்பு தொடர்பான தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றது.
அகில இந்திய தொழில்நுட்ப கல்வியியல் கூட்டமைப்பு, மத்திய கல்வி அமைச்சகத்தின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுக்கூடம் - கல்வி மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான புதுமைகள் கண்டுபிடிப்புகளுக்கான மையம் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தேசிய அளவிலான புது மென்பொருள் உருவாக்கம் போட்டியான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2024ன் இறுதி சுற்று இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
7 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த போட்டி தமிழகத்தில் 7 மையங்களில் ஒன்றாகவும் நாடு முழுவதும் உள்ள 51 மையங்களில் ஒன்றாகவும் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் இந்திய அரசாங்கத்தின் 54 அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் துறை சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு கானவும் மென்பொருள்கள் உருவாக்கப்பட மாணவர்களுக்கு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளன.
கோவையில் நடைபெறும் இறுதிச்சுற்றில் தேர்வு மையத்தில் 121 மாணவர்கள் கொண்ட 20 மாணவர் குழுக்கள் நாட்டில் பல்வேறு மாநிலங்களிலிருந்து பங்கேற்கின்றனர்.
மேலும் கோவை மையத்தில் மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் பஞ்சாயத்துராஜ் அமைச்சகம் மற்றும் டெல்லி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் நான்கு கருத்துருக்களுக்கான மென்பொருள்கள் வடிவமைப்பு தொடர்பான தலைப்புகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் "ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்" 2024 போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மத்தியில் சிறப்பு உரை நிகழ்த்தினார்
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 5 ஆவது ஆண்டாக இந்த ஆண்டு இன்றும் நாளையும் நடைபெறும் நிகழ்ச்சியின் துவக்கவிழா நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி கோவை டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் விநியோக மைய தலைவர் செல்வகுமார் பாலசுப்பிரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“