வரும் துன்பங்களை தைரியத்துடன் எதிர்கொள்ளும் திறன் வெற்றியின் அடையாளமாகும். ஆண்டு முடிவுக்கு வரும் தருவாயில், இந்தியாவின் மதிப்புமிக்க நுழைவு தேர்வு அல்லது வாரிய தேர்வுகளை வென்ற வேட்பாளர்களின் சில எழுச்சியூட்டும் கதைகள் இங்கே.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
ராஜஸ்தானின் தொலைதூர கிராமத்தில் மருத்துவ நுழைவு நீட் தேர்வில் வென்ற ஜோதரம் படேல் முதல் 12ம் வகுப்பு வாரியத் தேர்வில் முதலிடம் பிடித்த ஹரியானாவின் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் வரை…. இந்தியாவின் எதிர்கால கனவுகள் ஏராளம்.
அகில இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற கேரளாவின் குரிச்சியா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையை ஸ்ரீதண்யா சுரேஷ் பெற்றார்.
22 வயதான ஸ்ரீதண்யா கேரளாவின் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2018ம் ஆண்டின் சிவில் சர்வீசஸ் தேர்வில், அகில இந்தியா பட்டியலில் 410-வது இடத்தைப் பெற்றார். அவரது கூலி தொழிலாளி, தாய் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்.
ஸ்ரீதண்யா தனது 22 வயதில் வயநாட்டின்அமைந்திருக்கும் ஆதிவாசி ஹாஸ்டலில் பணிபுரிந்துக் கொண்டார். அப்போதைய வயநாடு கலெக்டர் ஸ்ரீராம் சமாஷிவ ராவ் கொடுத்த ஊக்கத்தால் , சிவில் சர்வீஸ் தேர்வில் கலந்து கொள்ள ஆர்வப்பட்டார். சிவில் சர்விஸ் தேர்வில் டெல்லியில் நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்வதற்கு கூட ஒரு நண்பர் பண ரீதியாக அவருக்கு ஆதரவளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொலைதூர ராஜஸ்தான் கிராமத்திலிருந்து, 22 வயதான ஜோதரம் படேல் நீட் விரிசல்
ராஜஸ்தானின் தொலைதூர கிராமத்தில் இருந்து வந்த ஜோதரம் படேல், தேசிய தகுதி-நுழைவுத் தேர்வை (நீட்) அகில இந்திய தரவரிசை பட்டியலில் 3,886 ஐ இடத்தைப் பெற்றார். என்னடா …. 3,886 ரேங்க் இது ஒரு செய்தியா? என்று நினைக்கிறீர்களா?
ஜோதரம் பிளஸ்-டூ தேர்வுகளில் மிகவும் மோசமாகப் மதிப்பெண்களைப் பெற்றார். இதனால், அவர் விவசாயத்தை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டார். இருப்பினும், 22 வயதான அவர் தனது கல்வியிலும், கடின உழைப்பிலும் நம்பிக்கை கொண்டிருந்தார். மருத்துவ நீட் நுழைவுத் தேர்வை சந்திக்கவும் முடிவு செய்தார்.
அவர் முதல் முயற்சியில் நீட் தேர்வில் சாதித்தார் .ஜோதரம் படேல் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “15 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த கிராமத்தைச் சேர்ந்த நான் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். கடைசியாக 2004ம் ஆண்டில் தான் இந்த கிராமத்தில் இருந்து ஒருவர் மருத்துவரானார்” என்று கூறினார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) தேர்விலும் இவரால் 5,391- வது இடங்களைப் பெற்றார்.
ஜே.என்.யூ பாதுகாப்பு காவலர் வர்சிட்டியின் நுழைவுத் தேர்வில் விரிசல்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பாதுகாவலர் பணி செய்துவந்த 34 வயதான ராம்ஜல் மீனா, ரஷ்ய மொழியில் பி.ஏ (ஹானர்ஸ் ) படிப்பதற்கான அந்த பல்கலைக்கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.
மீனா ஏற்கனவே ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் (ஆர்.யு) இளங்கலை பட்டம் பெற்றவர். மேலும், ஆர்.யு-வில் தொலைதூர பயன்முறையில் மூலம் எம்.ஏ. அரசியல் அறிவியலின் முதலாம் ஆண்டில் தேர்ச்சியும் பெற்றிருக்கிறார்.
யு.பி.எஸ்.சி தேர்வில் கலந்துகொண்டு அரசுக்கு சேவை செய்ய விரும்புகிறார்.
மூன்று மகள்களுக்கு தந்தையான ராம்ஜல் மீனா, தினசரி கூலியின் மகன். இவர் 2014 முதல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு காவலராக பணியாற்றி வருகிறார்.
கூலித் தொழிலாளி மகன் ஜே.இ.இ. மெயின் தேர்வில், சாதித்த கதை
ராஜஸ்தானின் பழங்குடி கிராமமான ஜலவாரின் மொகயபீ பிலானில் வசிக்கும் லெக்ராஜ் பீல் 2012 ல் தான் தனது வீட்டில் முதன் முதலில் மின்சாரத்தைக் கண்டார். அதற்கு முன், அவர் மெழுகுவர்த்தி விளக்கில் பபயின்று தான் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். வாழ்கையின் அணைத்து வேதனைகளையும் எதிர்கொண்ட,லெக்ராஜ் பீல் 18 வயதில் இந்தியாவில் கடிமான தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் ஜேஇஇ மெயின் தேர்வில் சாதித்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பீலுக்கு ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வுகள் குறித்த எந்த விழுப்புணர்வும் இல்லை. அவரது ஒரே நோக்கம் அவரது பெற்றோருக்கு ஒரு வலுவான ஆதரவாக மாற வேண்டும் என்பதே. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் இருவரும் வேலை செய்கின்றனர். மாத வருமானம் ரூ .3,000 பெறுகிறார்கள். ஜே.இ.இ மெயின் தேர்வில் சாதித்தன் மூலம் , அவர் தனது பெற்றோரின் கனவை நிறைவேற்றியது மட்டுமல்லாமல், தனது கிராமத்திலிருந்து இந்த நுழைவு தேர்வில் சாதித்த முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
குப்பை பொறுக்குபவரின் மகன் எய்ம்ஸ் நுழைவு தேர்வில் சாதித்த கதை:
மத்திய பிரதேசத்தில் ஒரு குப்பை பொறுக்குபவரின் மகனான ஆஷாராம் சவுத்ரி தனது முதல் முயற்சியிலேயே எய்ம்ஸ் கல்லூரியில் சேர்ந்தார். இவன் அகில இந்திய தரவரிசையில் 707 இடத்தையும், அகில இந்திய ஓபிசி பிரிவில் 141 இடத்தையும் பெற்றார்.
விஜயகஞ்ச்,மண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆஷாராம் சவுத்ரியின் கல்விக்கு உள்ளூர் தொழிலதிபரும், மருத்துவர் ஒருவரும் ஆதரவளித்தனர். அவர் இளம் விஞ்ஞானி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஜோத்பூர் எய்ம்ஸ் கல்லூரியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்ற 18 வயதான ஆஷாராம், தேசத்தைக் கட்டியெழுப்ப பங்களிப்புச் செய்ய விருப்பம் உள்ளதாகவும், எதிர்காலத்தில் பலருக்கு ஊக்கமளிக்க முடியும் என்று நம்புகிறார். யுடுபில் அடுத்த தலைமுறை மாணவர்களுக்கு நீட் தொடர்பான சந்தேகங்களை தீர்த்து வருகிறார்.
கூலித் தொழிலாயின் மகள் சஷி, நீட் தேர்வில் சாதித்தார்:
ஒரு தொழிலாளியின் மகளான சஷி , இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற , லேடி ஹார்டிங்கே கல்லூரியில் சேர்க்கை எடுத்துள்ளார். 2018ம் ஆண்டில், அவர் டெல்லி அரசாங்கத்தின் ஜெய் பீம் முகமந்திரி பிரதிபா யோஜனா திட்டத்தில் சேர்ந்தார், இதன் கீழ் பட்டியல் சாதி மாணவர்களுக்கு மானிய விலையில் அல்லது நீட் உள்ளிட்ட தேசிய அளவிலான தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஹரியானா வாரியத் தேர்வில் சாதித்த பெண் தேர்வர்கள்:
ஹரியானா வாரியத் தேர்வில் முதலிடம் பிடித்த
கூலித் தொழிலாளியின் மகள் இஷா தேவி- பிரதமர் ஆக விரும்புகிறார்
ஹரியானாவின் கைதால் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயதான இஷா தேவி, சிபிஎஸ்இ வாரியத் தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு ல் 497 புள்ளிகளைப் பெற்றுள்ளார். ஆங்கிலம், கணிதம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் 100 மதிப்பெண்கள் பெற்றார்.
“என் தந்தை ஒரு தொழிலாளி. குடும்பத்தில் கஷ்டங்கள் இருப்பதை நான் புரிந்துகொண்டாலும், என் பெற்றோர் அந்த கஷ்டத்தை ஒருபோதும் உணரவைக்கவில்லை, எனது படிப்பில் அவர்கள் தலையிடவும் இல்லை ”என்று இஷா தேவி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற நாளிதழுக்கு தெரிவித்தார்.
கார்பெண்டரின் மகள் ஒரு ஐ.ஏ.எஸ்
தச்சரின் மகளான சஞ்சு, சிபிஎஸ்இ வாரியத் தேர்வில் அறிவியல், கணிதம் மற்றும் சமஸ்கிருதத்தில் 100 மதிப்பெண்களைப் பெற்றார், அதே நேரத்தில் இந்தி சமூக அறிவியல் துறையில் 98 மதிப்பெண்களைப் பெற்றார். இவரும்,இஷா தேவியைப் போன்று 500 மதிப்பெண்களில் மொத்தம் 497 மதிப்பெண்களை பெற்றவர். இந்திய குடிமைப்பணி தேர்வில் கலந்து கொண்டு ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பது இவரின் விருப்பம் .