முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான சவுத் இந்தியன் வங்கியில் (South Indian Bank) இளநிலை அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 26.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Junior Officer/ Business Promotion Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: தற்போதைய அறிவிப்பில் காலியிடங்களின் எண்ணிக்கை கொடுக்கப்படவில்லை.
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 30.04.2025 அன்று 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ. 7.44 லட்சம்
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://recruit.southindianbank.com/RDC/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு மே 19 ஆம் தேதி தொடங்குகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.05.2025
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ரூ.200
இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.