RRB Apprentice eligibility, age limit, fee details: ரயில்வே தொழில் பழகுநர் பயிற்சி (அப்ரெண்டிஸ்ஷிப்) பணி பணிகளுக்கான நோட்டிபிகேஷனை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
Advertisment
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அப்ரெண்டிஸ்ஷிப் பயிற்சி பெற வேண்டும்.
இதற்கு ஆர்வமுள்ள தேர்வர்கள், அதிகாரப்பூர்வ வலைத்தளமான sr.indianrailways.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடலாம்.
இதற்கான விண்ணப்ப செயல்முறை, டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறும். ஆன்லைன் செயல்முறையில் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி
தெற்கு ரயில்வே பிரிவின் அதிகார வரம்பில் இருக்கும் தேர்வர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியிட விவரங்கள் :
Single and telecommunication Workshop : 1654 பணிகள்
கல்வித் தகுதி: தேர்வர்கள் 10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அல்லது) அதற்கு சமமான குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
என்.சி.வி.டி /எஸ்.சி.வி.டி அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஐ.டி.ஐ சான்றிதழ் வாங்கியிருக்க வேண்டும்.
வயது வரம்பு: தேர்வர்கள் 15 முதல் 22 வயது வரை இருக்க வேண்டும். Freshers /Ex-IT, MLT தேர்வர்களுக்கு வயது வரம்பு 24 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது. எஸ்/சி, எஸ்டி போன்ற பட்டியல்பிரிவு தேர்வர்கள் அரசாங்க விதிமுறைகளின்படி வயது தளர்வு பெறுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் : பொது/ ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ .100 செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி / பிடபிள்யூபிடி (PWPD )/ பெண்கள் போன்ற வகை தேர்வர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பிப்பது எப்படி :
ஆர்வமுள்ளவர்கள் 2019 டிசம்பர் 1 முதல் 31 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான-r.r.ianianrailways.gov.in சென்று விண்ணப்பிக்க வேண்டும்.