தென்னக ரயில்வே வேலைவாய்ப்பு; 12th, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Southern Railway invites application for various posts: ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Southern Railway invites application for various posts: ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
two youths from west bengal arrested, two youths from west bengal held in erode for impersonating as loco pilots, இரண்டு இளைஞர்கள் கைது, லோகோ பைலட்டாக ஆள்மாறாட்டம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 2 பேர் கைது, erode, tamil nadu news, railway news, rpf

தென்னக ரயில்வேயில் (Southern Railway) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

தென்னக ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான (Sports Quota) சிறப்பு பிரிவில் காலியாக 21 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு விளையாட்டுத்துறையில் சிறப்பு தகுதி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதில் படிப்பு மற்றும் தகுதிக்கேற்ப பதவிகள் வழங்கப்படும். தகுதியானவர்கள் 30.11 2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 21

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிற தகுதிகள் : ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Advertisment
Advertisements

சம்பளம் : பதவிகளுக்கு ஏற்ப அடிப்படை சம்பளம் ரூ. 19,900 முதல் 29,200 ஆக உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://rrcmas.in/downloads/rrc-sports-appn-web.pdf  என்ற இணையதள பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.11.2021

முகவரி : The Assistant Personnel Officer, Railway Recruitment Cell, Southern Railway 3rd Floor, No 5 Dr.P.V.Cherian Crescent Road, Egmore, Chennai – 600 008.

விண்ணப்பக் கட்டணம் : SC/ST, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளுக்கு ரூ 250, பொது மற்றும் OBC பிரிவுகளுக்கு ரூ.500

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://rrcmas.in/downloads/rrc-sports-en-web.pdf  என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Tamil Nadu Jobs Southern Railway

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: