தெற்கு ரயில்வே வேலை வாய்ப்பு; கோவையில் 1284 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

தெற்கு ரயில்வேயின் கோவை மண்டலத்தில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 1284 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தெற்கு ரயில்வே வேலை வாய்ப்பு; கோவையில் 1284 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

தெற்கு ரயில்வேயில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1284 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்திய அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கோவை மண்டலத்தில், போத்தனூர், சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய பணிமனைகளில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022

இதையும் படியுங்கள்: தெற்கு ரயில்வே வேலை வாய்ப்பு; சென்னையில் 1343 பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

காலியிடங்களின் விவரம்

Fitter – 163

Turner – 21

Welder – 10

Welder (G&E) – 131

Machinist – 16

Electrician – 286

Painter – 43

Electronic Mechanic – 75

Carpenter – 72

Wireman – 12

Plumber – 56

Diesel Mechanic – 42

Draughtsman (Civil) – 10

COPA – 76

Fitter (Electrical) – 55

Fitter (Mech) – 60

Black Smith – 31

Brick Layer – 10

Refrigeration and AC Mechanic – 14

ICTSM (Information & communication Technology system maintenance) – 7

Instrument Mechanic – 21

SSA (Stenographer & Secretarial Assistant) – 40

Desktop publishing operator – 20

Front office Assistant (FOA) – 13

கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 6000 – 7000

வயது தகுதி: 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://sr.indianrailways.gov.in/view_section.jsp?fontColor=black&backgroundColor=LIGHTSTEELBLUE&lang=0&id=0,4,1618,1860 என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2022

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. ஆனால் SC / ST / PwBD / பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும் விவரங்களுக்கு https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1664596887702-PTJ_ActApprentices_Notification2022.pdf இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Southern railway kovai zone recruitment 2022 for 1284 iti and class 10 apprentices apply online

Exit mobile version