Advertisment

சிறப்பு மருத்துவ படிப்புகளில் காலியிடங்கள்; நீட் மதிப்பெண் இல்லாமல் நிரப்ப மத்திய அரசு முடிவு

நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
NEET

Special medical courses admission will be without NEET PG cut off: நீட் நுழைவுத் தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் இல்லாமல் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

Advertisment

2021 கல்வியாண்டுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான (DM/M.Ch/DNB (Super Speciality)) நீட் நுழைவுத் தேர்வு ஜனவரி மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, அகில இந்திய மற்றும் மாநில அளவில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கூட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வு குழு மேற்கொண்டது. இதில், பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது.

இதையும் படியுங்கள்: TNEA கவுன்சலிங்; ஒட்டுமொத்த ரேங்க் vs கம்யூனிட்டி ரேங்க் எது முக்கியம்?

இதனையடுத்து நீட் தேர்வு மதிப்பெண்ணில் 15 சதவீதம் குறைப்பது என மத்திய சுகாதார அமைச்சகம் முடிவெடுத்தது. இதனடிப்படையில், இரண்டு கூடுதல் கலந்தாய்வுகளும், சிறப்பு கலந்தாய்வும் (Mop-up Counselling) நடத்தப்பட்டது. இருப்பினும், 747 இடங்கள் காலியாக இருந்தன.

இந்நிலையில், மேற்கண்ட காலியிடங்களை நிரப்புவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், கட் ஆஃப் மதிப்பெண் கணக்கில் கொள்ளாமல் இரண்டாவது சிறப்பு கலந்தாய்வு (Special Mop-up Round II) கூட்டத்தை நடத்த கலந்தாய்வு குழு முடிவெடுத்துள்ளது.

இதன் காரணமாக, நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அதேநேரம், இது ஒருமுறை வழங்கும் வாய்ப்பாக எடுத்துக் கொள்ளப்படும். அகில இந்திய மற்றும் மாநில அளவில் உள்ள இடங்களை எடுக்காத மாணவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றவர்கள் கூட சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவ சீட் பெறலாம். இப்படியான நிலை சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வுக்கு நடக்கும் போது, ​​ஏன் எதிர்காலத்தில் மற்ற நுழைவுத் தேர்வுகளிலும் நடக்கக் கூடாது. இது நுழைவுத் தேர்வுகள் தோல்வியடைந்ததை நிரூபிக்கிறது. பள்ளி பொதுத் தேர்வு மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வாருங்கள். அவற்றின் இறுதித் தேர்வுகளின் அடிப்படையில் சேர்க்கை இருக்க வேண்டும், என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, 2022 வருட உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Neet
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment