இந்திய விளையாட்டு ஆணையத்தில் 220 உதவி பயிற்சியாளர் வேலை; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Sports Authority of India jobs 220 Assistant coaches vacancies apply soon: இந்திய விளையாட்டு ஆணையத்தின் உதவி பயிற்சியாளர் வேலைவாய்ப்பு; 220 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் உதவி பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய விளையாட்டு ஆணையத்தில், 26 விளையாட்டுகளுக்கான உதவி பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 220 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2021

உதவி பயிற்சியாளர் (Assistant Coaches)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 220

பிரிவு வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை

Archery – 13

Athletics – 20

Basketball – 6

Boxing – 13

Cycling – 13

Fencing – 13

Football – 10

Gymnastics – 6

Handball – 3

Hockey – 13

Judo – 13

Kabaddi – 5

Karate – 4

Kayaking & Canoeing – 6

Kho-Kho – 2

Rowing – 13

Sepak Takraw – 5

Shooting – 3

Softball – 1

Swimming – 7

Table Tennis – 7

Taekwondo – 6

Volleyball – 6

Weightlifting – 13

Wrestling – 13

Wushu – 6

வயதுத் தகுதி : 40 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி SC/ST/OBC/Ex-Serviceman பிரிவுகளுக்கு வயது வரம்பு தளர்வு உண்டு.

கல்வித் தகுதி : SAI, NS NIS மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் டிப்ளமோ பயிற்சியாளர் (Diploma in Coaching) படிப்பு படித்திருக்க வேண்டும். அல்லது ஒலிம்பிக் அல்லது சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். அல்லது துரோணச்சாரியார் விருது பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 41,420 – 112,400

தேர்வு செய்யப்படும் முறை : சம்பந்தப்பட்ட விளையாட்டுத்துறையில் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவார்கள். ஒப்பந்த காலம் மேலும் நீட்டிக்கபட வாய்ப்புண்டு.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sportsauthorityofindia.nic.in/sai/ என்ற இணையதள பக்கத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 10.10.2021

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேற்கொண்டு தகவல் அறிய https://sportsauthorityofindia.nic.in/sai/public/assets/jobs/1629970227_Detailed%20advt.%20for%20Asstt.%20Coaches%20on%20Contract%20for%20SAI%20(1)%20(1).pdf என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sports authority of india jobs 220 assistant coaches vacancies apply soon

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com