சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளை படிக்க எவ்வளவு செலவாகும்? ஸ்காலர்ஷிப் என்னென்ன இருக்கு? உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் சிறந்த சுயநிதி பல்கலைக்கழகங்களில் ஒன்றான எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் டிகிரி, இன்ஜினியரிங் முதல் எம்.பி.பி.எஸ் வரையிலான படிப்புகளை வழங்கி வருகிறது.
இதில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எப்படி நடைபெறும்? கல்விக் கட்டணம் எவ்வளவு? ஸ்காலர்ஷிப் எப்படி? உள்ளிட்டவற்றை இப்போது தெரிந்துக் கொள்வோம். யு.கே.வி தமிழா என்ற யூடியூப் சேனலில் இந்த தகவல்களை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் சிறந்த சுயநிதி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்றால், SRMJEEE என்ற நுழைவுத் தேர்வில் தகுதி பெற வேண்டும்.
Advertisment
Advertisements
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தைப் பொறுத்தவரை காட்டாங்குளத்தூர் ராமபுரம், வடபழனி, திருச்சி வளாகங்கள் உள்ளன. இதுதவிர டெல்லி, ஆந்திராவிலும் வளாகங்கள் உள்ளன. இங்கு பொறியியல் படிப்புகளுக்கு கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ. 2,75,000 – 5,00,000 வரை செலவாகிறது. இதுதவிர விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம், பேருந்துக் கட்டணம் தனி. அதேநேரம் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் பல்வேறு ஸ்காலர்ஷிப்களை வழங்குகின்றன.
நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 1-23 இடங்களுக்குள் வந்தால் 100% ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது. 24-68 இடங்களுக்கு வந்தால் 100%, 69- 128 இடங்களுக்குள் வந்தால் 75%, 129-203 இடங்களுக்குள் வந்தால் 50%, 204-293 இடங்களுக்குள் வந்தால் 25% ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.
ராமபுரம் மற்றும் திருச்சி வளாகங்களில் 10000 இடங்கள் வரை பெறுபவர்களுக்கு, குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.