SRMJEEE 2020 Exam Datesheet : எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (SRMIST) தனது பொறியியல் நுழைவுத் தேர்வுக்கான (SRMJEE) தேதிகளை அறிவித்துள்ளது. சமீபத்தில் வந்த இந்த அறிவிப்பின்படி, SRMJEEE 2020 ஆன்லைன் தேர்வு ஏப்ரல் 12 ம் தொடங்கி 20 ம் தேதிவரை வரை நடத்தப்படுகின்றன .
இந்த தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் பெறுவதற்கான காலக்கெடு 2020, மார்ச் 30 ம் தேதியாகும், ஆஃப்லைனில் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 29 ம் தேதியாகும். தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,100 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தேர்வர்கள் தங்களுக்கு பொருந்தக் கூடிய தேர்வு இடம் மற்றும் தேதி போன்றவைகளை பதிவு செய்யலாம்.
ஜூன் நான்காம் வாரத்திலிருந்து தொடங்கவிருக்கும் வகுப்புகளுக்கான இத்தேர்வுக்கான கவுன்சிலிங் மே இரண்டாவது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று எஸ்ஆர்எம் அறிவிப்பு தெரிவித்துள்ளது. கவுன்சிலிங்கிற்குப் பிறகு, பிடெக் படிப்புகளுக்கான இடங்கள் அந்தந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
எஸ்ஆர்எம்ஐஎஸ்டி: காட்டங்குளத்தூர் , ராமபுரம், வடபாலனி, காஜியாபாத் , எஸ்.ஆர்.எம் (ஆந்திரா ) – அமராவதி, எஸ்ஆர்எம் (ஹரியானா) – சோனேபட் போன்ற இடங்களுக்காக இத்தேர்வு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
SRMJEEE 2020: தேர்வு முறை
கணினி அடிப்படையிலான முறையில் இரண்டரை மணி நேரத்தில் தேர்வு நடக்கவிருக்கின்றன . மொத்தம் 124 மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் இருக்கும். தவறான பதிலுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்பியல், வேதியியல், கணிதம்/உயிரியல் போன்ற பாடங்களில் இருந்து முறையே 35, 35 மற்றும் 40 கேள்விகள் வரும் . ஆங்கிலத் திறனை சோதனை செய்யும் விதமாக 5 கேள்விகளும், அப்டிட்யூட் பிரிவில் 10 கேள்விகளும் இருக்கும்.
2019 ல் நடந்த SRMJEE தேர்வை , இந்தியாவின் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் இருந்தும் மற்றும் துபாய், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஓமான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 1,40,000 வேட்பாளர்கள் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்தியா மற்றும் மத்திய கிழக்கில் 128 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் அளித்துள்ள டேட்டாவின் படி 55.26 சதவீத விண்ணப்பங்கள் சில குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து வருகின்றன . ஆந்திரா (21,002), தமிழ்நாடு (18,663), உத்தரபிரதேசம் (13,215), தெலுங்கானா (12,636), மற்றும் மகாராஷ்டிரா (10,120) என்ற கணக்கில் உள்ளது.