Advertisment

SSC CGL 2024: மத்திய அரசில் 17727 பணியிடங்கள்; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

SSC CGL Exam 2024: மத்திய அரசின் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி தகுதிக்கு 17727 காலியிடங்கள்; தேர்வு முறை, சிலபஸ் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இங்கே

author-image
WebDesk
New Update
ssc jobs

SSC CGL Exam 2024

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 17,000க்கும் மேற்பட்ட குரூப் ’பி’ மற்றும் ’சி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. டிகிரி முடித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் 17,727 பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

நிரப்பப்படும் பதவிகளின் விவரம்

குரூப் ‘பி’ பதவிகள்

Assistant Audit Officer

Assistant Accounts Officer

Assistant Section Officer

Assistant

Inspector of Income Tax

Inspector, (CGST & Central Excise)

Inspector (Preventive Officer)

Inspector (Examiner)

Assistant Enforcement Officer

Sub Inspector

Inspector Posts

Assistant/ Superintendent

Research Assistant

Divisional Accountant

Sub Inspector

Junior Statistical Officer (JSO)

Statistical Investigator Grade-II

குரூப் ‘சி’ பதவிகள்

Postal Assistant/ Sorting Assistant 

Auditor

Accountant/ Junior Accountant

Senior Secretariat Assistant/ Upper Division Clerks

Senior Administrative Assistant

Tax Assistant

Sub-Inspector

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் தேவைப்படும்.

வயதுத் தகுதி : இந்த பதவிகளுக்கு 01.08.2024 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ஒவ்வொரு பதவிகளுக்கும் ஒவ்வொரு வகையாக சம்பள முறை உள்ளது.

சம்பள முறை பற்றிய விவரங்கள் பின்வருமாறு.

Pay Level-8 (₹ 47600 to 151100)

Pay Level-7 (₹ 44900 to 142400)

Pay Level-6 (₹ 35400 to 112400)

Pay Level-5 (₹ 29200 to 92300)

Pay Level-4 (₹ 25500 to 81100)

தேர்வு முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 1 மணி நேரம். இதில் தகுதி பெறுபவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். 

முதன்மைத் தேர்வு 390 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் Mathematical Abilities மற்றும் Reasoning and General Intelligence பிரிவில் தலா 30 கேள்விகளும் English Language and Comprehension பிரிவில் 45 கேள்விகளும் General Awareness பிரிவில் 25 கேள்விகளும் என 130 கேள்விகள் கேட்கப்படும். Computer Knowledge பிரிவில் 20 வினாக்கள் கேட்கப்படும். ஆனால் இது தகுதி பிரிவு மட்டுமே. அதன்பின்னர் தட்டச்சு தேர்வு நடைபெறும். 

பாடத்திட்டம்

பொது அறிவு பிரிவில் இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள் குறிப்பாக வரலாறு, கலாச்சாரம், புவியியல், பொருளாதாரம், பொதுக் கொள்கை & அறிவியல் ஆராய்ச்சி ஆகிய பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

ஆங்கில பிரிவில் தேர்வர்களின் அடிப்படை ஆங்கில திறனை சோதிக்கும் வகையில் கேள்விகள் இடம்பெறும்.

கணித பிரிவில் எண் கணிதம், இயற்கணிதம், வடிவியல், முக்கோணவியல், வட்டி கணக்குகள், சராசரி, விகிதம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

திறனறிதல் பிரிவில் எண்கள், படங்கள், திசைகள், எண் வரிசை, மறைகுறியாக்கட்ட வரிசைகள் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.07.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Ssc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment