மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் 17,727 பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
நிரப்பப்படும் பதவிகளின் விவரம்
அசிஸ்டெண்ட், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், ஆடிட்டர், ஜூனியர் அக்கௌண்டண்ட், டாக்ஸ் அசிஸ்டெண்ட், அசிஸ்டெண்ட் செக்சன் ஆபிசர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் தேவைப்படும்.
வயதுத் தகுதி: இந்த பதவிகளுக்கு 01.08.2024 அன்று 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.
சம்பளம்
ஒவ்வொரு பதவிகளுக்கும் ஒவ்வொரு வகையாக சம்பள முறை உள்ளது. சம்பள முறை பற்றிய விவரங்கள் பின்வருமாறு.
Pay Level-8 (₹ 47600 to 151100)
Pay Level-7 (₹ 44900 to 142400)
Pay Level-6 (₹ 35400 to 112400)
Pay Level-5 (₹ 29200 to 92300)
Pay Level-4 (₹ 25500 to 81100)
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.07.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“