Advertisment

மத்திய அரசு வேலை; 7500க்கும் அதிகமான பணியிடங்கள்; டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மத்திய அரசின் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
SSC MTS 2022; மத்திய அரசில் 3600+ வேலை; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

SSC CGL recruitment 2022 apply soon: மத்திய அரசுத்துறைகளில் காலியாக உள்ள 7500க்கும் மேற்பட்ட குரூப் ’பி’ மற்றும் ’சி’ பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisment

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கான தகுதியில் 7500 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  23.01.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

நிரப்பப்படும் பதவிகளின் விவரம்

குரூப் ‘பி’ பதவிகள்

Assistant Audit Officer

Assistant Accounts Officer

Assistant Section Officer

Assistant

Inspector of Income Tax

Inspector, (CGST & Central Excise)

Inspector (Preventive Officer)

Inspector (Examiner)

Assistant Enforcement Officer

Sub Inspector

Inspector Posts

Assistant/ Superintendent

Research Assistant

Divisional Accountant

Sub Inspector

Junior Statistical Officer (JSO)

Statistical Investigator Grade-II

குரூப் ‘சி’ பதவிகள்

Auditor

Accountant/ Junior Accountant

Senior Secretariat Assistant/ Upper Division Clerks

Tax Assistant

கல்வித் தகுதி : இந்த பதவிகளுக்கு பொதுவான கல்வித் தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி. இருப்பினும் சில பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் தேவைப்படும்.

வயதுத் தகுதி : இந்த பதவிகளுக்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்து தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத்தேர்வானது, முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். சில பதவிகளுக்கு கூடுதல் தகுதித் தேர்வும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.01.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_23122021.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Ssc Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment