எஸ்.எஸ்.சி ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு : 4,726 பணிகளுக்கு உடனே விண்ணப்பியுங்கள்

SSC CHSL Recruitment application : விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 15 கடைசி நாளாகும்

SSC CHSL Recruitment 2020: மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் இளநிலை எழுத்தர் (எல்டிசி) / இளநிலை செயலக உதவியாளர் (ஜேஎஸ்ஏ), அஞ்சல் உதவியாளர் (பிஏ) / அஞ்சல் பிரிப்பு உதவியாளர் (எஸ்ஏ), தரவு உள்ளிடும் பணியாளர் (டிஇஓ) என  மொத்தம் 4,726  பதவிகள் நியமனத்திற்கான ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2020-க்கான அறிவிக்கையைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 15 கடைசி நாளாகும்.

காலி பணியிடங்கள்:

இளநிலை எழுத்தர் (எல்டிசி) / இளநிலை செயலக உதவியாளர் (ஜேஎஸ்ஏ) – 1,538 ;

அஞ்சல் உதவியாளர் (பிஏ) / அஞ்சல் பிரிப்பு உதவியாளர் (எஸ்ஏ) – 3,181

தரவு உள்ளிடும் பணியாளர் (டிஇஓ) – 7

விண்ணப்பக் கட்டணம்: 100 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அனைத்து பெண் விண்ணப்பதாரர்களுக்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அரசு உத்தரவுகளின்படி இடஒதுக்கீட்டுச் சலுகையைப் பெற தகுதி உடைய எஸ் சி / எஸ் டி / முன்னாள் படைவீரர் / போர் வீரர்களின் விதவையர் உள்ளிட்ட பிரிவினருக்கும் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: அடுக்கு(Tier)-1 தேர்வு நாடு முழுவதும் 2021    ஏப்ரல் 12 முதல் 27 தேதிகளில் நடைபெறும். இதில், தேர்ச்சி பெறுபவர்கள், அடுக்கு( Tier)- II தேர்வில் கலந்து கொள்வார்கள்.

Tier- I தேர்வு:

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ssc chsl 2020 notification for 4726 vacancies ssc nic in

Next Story
தமிழ்வழி மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20% இடஒதுக்கீடு: ஆளுநர் ஒப்புதல்tamil nadu governor banwarilal purohit, governor banwarilal purohit approved, banwarilal purohit apporoved to bill 7.5 per cent internal reservation, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம், tamil nadu, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா, mk stalin thanks to governor, ஆளுநருக்கு முக ஸ்டாலின் நன்றி mbbs seats, 7.5 per cent internal reservation fot govt school students, மருத்துவப் படிப்பு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com