Advertisment

மத்திய அரசு வேலை; 25,271 காவலர் பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

SSC GD Constable recruitment 2021: Application process begins for 25,271 posts: 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய காவல் துறையில் வேலைவாய்ப்பு; 25,271 பணியிடங்களுக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மத்திய அரசு வேலை; 25,271 காவலர் பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) மத்திய காவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில், பி.எஸ்.எஃப் (எல்லை பாதுகாப்பு படை), சி.ஐ.எஸ்.எஃப் (மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை), மற்றும் ஐ.டி.பி.பி (இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ்), எஸ்.எஸ்.பி (சாஸ்தா சீமா பால்), அஸ்ஸாம் ரைபிள்ஸில் செயலக பாதுகாப்புப் படை (எஸ்.எஸ்.எஃப்) மற்றும் ரைபிள்மேன் (பொது) ஆகிய பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisment

இந்த பணியிடங்களுக்கு ஜூலை 17, 2021 முதல் ஆகஸ்ட் 31 இரவு 11:59 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல், விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 2, 11:59 மணிக்குள் ரூ .100 விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். ஆர்வமுள்ளவர்கள் ssc.nic.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

படி 1: ssc.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்திற்கு செல்லவும்.

படி 2: உங்கள் ‘பதிவு எண்’ மற்றும் கடவுச்சொல் மூலம் ஆன்லைன் அமைப்பில் உள்நுழைய வேண்டும்.

படி 3: விண்ணப்பத்தில் தேவையான தகவல்களை உள்ளிடவும்.

செயல்முறை, தகுதிகள் மற்றும் ஆவணம் தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் விரிவான வழிமுறைகளுக்கு, விண்ணப்பதாரர்கள் வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும் மற்றும் சிஏபிஎப்களில் உள்ள கான்ஸ்டபிள்களின் அறிவிப்பு (ஜிடி), என்ஐஏ, எஸ்எஸ்எஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸில் ரைஃபிள்மேன் என்ற ’இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை JPEG வடிவத்தில் (20 KB முதல் 50 KB வரை) பதிவேற்ற வேண்டும். புகைப்படம் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். மேலும், புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி, புகைப்படத்தில் தெளிவாக அச்சிடப்பட வேண்டும்.

விசா, மாஸ்டர்கார்டு, மேஸ்ட்ரோ, ரூபே கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது எஸ்பிஐ சல்லானை உருவாக்குவதன் மூலம் எஸ்பிஐ கிளைகளில் பணம் மூலமாகவோ பிஐஎம் யுபிஐ, நெட் பேங்கிங் மூலமாகவோ ஆன்லைனில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.

இந்த காவலர் பணியிடங்களுக்கான தேர்வுமுறையில், கணினி அடிப்படையிலான தேர்வு, உடல் திறன் சோதனை, உடல் தர சோதனை, மருத்துவ பரிசோதனை மற்றும் ஆவண சரிபார்ப்பு ஆகியவை இருக்கும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்படும். இணையதளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை 25,271 ஆகும்.

எழுத்துத் தேர்வில் பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு, பொது அறிவு, பொது விழிப்புணர்வு, தொடக்க கணிதம், ஆங்கிலம் அல்லது இந்தி ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். தவறான வினாக்களுக்கு மைனஸ் மார்க் உண்டு. கேள்விகள் கொள்குறி வகையில் இடம் பெறும். தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம் எஸ்.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.

தகுதிகள்

கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு அல்லது எஸ்.எஸ்.சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர்கள் 2021 ஆகஸ்ட் 1 ஆம் தேதி அன்று 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 2, 1998 க்கு முன்னும், ஆகஸ்ட் 1, 2003 க்குப் பிறகும் பிறந்திருக்கக்கூடாது.

வயது தளர்வு: எஸ்சி அல்லது எஸ்டி, ஓபிசி, முன்னாள் ராணுவவீரர்கள், 1984 கலவரங்கள் அல்லது 2002 ஆம் ஆண்டு வகுப்புக் கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் குழந்தைகள் அல்லது சார்ந்திருப்பவர்களுக்கு வயது தளர்வு உண்டு. ஒதுக்கப்பட்ட காலியிடங்கள் அல்லது வயது தளர்வுக்கு பரிசீலிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும், இல்லையெனில் அவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ssc Police Constable
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment