Advertisment

SSC; மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; சென்னை, திருவள்ளூர் ஆட்சியர்கள் அழைப்பு

மத்திய அரசில் 11,409 பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு; 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்; சென்னை, திருவள்ளூரில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்கள் இவைதான்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SSC; மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; சென்னை, திருவள்ளூர் ஆட்சியர்கள் அழைப்பு

மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி; சென்னை, திருவள்ளூர் ஆட்சியர்கள் அழைப்பு

மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) நடத்தப்படும் பன்முகப் பணியாளர் (Multi-Tasking Staff) தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் நடத்தப்படும் என சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Advertisment

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கான தகுதியில் பன்முக உதவியாளர், ஹவால்தார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளது.

இதையும் படியுங்கள்: UPSC CSE 2023; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆக விருப்பமா? டிகிரி தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

நிரப்பப்படும் பதவிகளின் விவரம்

பன்முக உதவியாளர் (Multi-Tasking (Non-Technical) Staff)

ஹவால்தார் (Havaldar in CBIC and CBN)

காலியிடங்களின் விவரம்

பன்முக உதவியாளர் (Multi-Tasking (Non-Technical) Staff) – 10880

ஹவால்தார் (Havaldar in CBIC and CBN) - 529

கல்வித் தகுதி : இந்த பதவிகளுக்கு பத்தாம் (10) வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுத் தகுதி : 01.01.2023 அன்று 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழி தேர்வு 100 மதிப்பெண்களுக்கு 1 மணி 30 நிமிடங்கள் கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் ஆங்கிலம் (General English), பொது அறிவு (General Awareness) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் மற்றும் திறனறிதல் (General Intelligence & Reasoning), கணிதம் (Numerical Aptitude) ஆகிய பகுதிகளில் இருந்து தலா 25 கேள்விகள் என மொத்தம் 90 கேள்விகள் கேட்கப்படும். ஓவ்வொரு கேள்விக்கும் தலா 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

ஹவால்தார் பணியிடங்களுக்கு கூடுதலாக உடற்தகுதி தேர்வு நடக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17.02.2023

இந்தநிலையில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டி மையத்தில் பணியாளர் தேர்வாணையத்தால் (SSC) நடத்தப்படும் பன்முகப் பணியாளர் (Multi-Tasking Staff) தேர்வுகளுக்கான இலவச பயிற்சி முகாம் நடத்தப்படும் என சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தேர்வு சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக, கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் கீழ் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டங்களான கிண்டி கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி மையம், கண்ணகி நகர் கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி மையம், மாநிலக் கல்லூரி கட்டணமில்லா போட்டித்தேர்வு பயிற்சி மையம் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து பயன்பெறலாம்.

மேலும், கொளத்தூர் சட்ட மன்ற தொகுதியிலும் தன்னார்வ பயிலும் வட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அங்கும் மாணவ, மாணவிகள் பயன் பெறலாம். மேலும், விவரங்களுக்கு, 9499966026, ,9499966023 8870976654, 7811863916, என்ற கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயிற்சி மையத்தில் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். பயிற்சி மற்றும் படிப்பு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். பங்கேற்பாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான சிறந்த ஆசிரியர்கள் எங்களிடம் உள்ளனர். மக்கள் எங்கள் மெய்நிகர் கற்றல் போர்ட்டலிலும் அனைத்து மாநில அளவிலான போட்டித் தேர்வுகள் தொடர்பான குறிப்புகளையும் அணுகலாம், எனத் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Jobs Ssc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment