Advertisment

SSC Recruitment 2021; மத்திய அரசு வேலை; 3244 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

SSC invites application for 3244 Selection posts: மத்திய அரசில் 3244 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; பணியாளர் தேவாணையம் வெளியீடு

author-image
WebDesk
New Update
SSC MTS 2022; மத்திய அரசில் 3600+ வேலை; 10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

மத்திய அரசில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணியாளர் தேர்வாணையம் 9 ஆம் கட்ட தேர்தெடுக்கப்பட்ட பதவிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 3244 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2021

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 3244

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பதவிகள்

Lab Attendant, Binder, Sanitary Inspector, Senior Projectionist,  Field cum Laboratory Attendant, Nursing Orderly, Driver cum Mechanic, Workshop Attendant, Boiler Attendant, Technical Operator, Photographer, Field cum Lab Attendant, Photo Artist, Canteen Attendant, Compositor, Field Attendant, MTS, Library Clerk.



12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பதவிகள்

Lab Assistants, Junior Technical Assistants, Laboratory Technician, Clerk, Senior Surveyor, Carpenter cum Artist, Receptionist / Ticketing Assistant, Junior Engineer, Senior Technician Assistant, Offset Machine man, Technical Clerk, Field Assistant, Senior Photographer, Preservation Assistant, Senior Conservation Assistant, Data Entry Operator (DEO), Clerk, Store Keeper, Photo Assistant, Library Clerk, Library Attendant, Stockman, Junior Computer



டிகிரி முடித்தவர்களுக்கான பதவிகள்

Store Keeper, Junior Engineers, Scientific Assistant, Field Assistant, Technical Officer, Dietician, Technical Superintendent, Textile Designer, Senior Scientific Assistant, Girls Cadet Instructor, Library and Information Assistant, Junior Technical Assistant, Senior Technical Assistant, Junior Zoological Assistant, Technical Officer, Scientific Assistants, Instructors, Junior Scientific Assistant, Senior Radio Technician, Research Associate, Tutor, Perfusionist, Store Incharge, Medical Record Officer, Nursing Officer, Dietician, Investigator, Assistant Curator, Assistant Scientific Officer, Wildlife Inspector, Assistant Extension Officer, Assistant Central Intelligence Officer, Assistant Drug Inspector, Legal Assistant, Junior Accounts Officers, Data Processing Assistant, DEO, Upper Division Clerk, Geographer

கல்வித் தகுதி : குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பதவி வாரியாக 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பதவிகளுக்கு பதவியை பொறுத்து கூடுதல் தகுதி தேவைப்படும்.

சம்பளம்

PB-1 ரூ. 5200 - 20200/- + GP ரூ.2400

PB-2 ரூ. 9300 - 34800/- + GP ரூ. 4200



விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. இருப்பினும் SC, ST, PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வில் திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளிலிருந்து தலா 25 வினாக்கள் என மொத்தம் 100 வினாக்கள் இடம்பெறும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/Portal/Apply என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.10.2021

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.sscsr.gov.in/SELECTION-POSTS-PHASE-IX-2021-NOTICE-dt24092021.pdf என்ற இணையதள பக்கத்தினைப் பார்வையிடவும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Jobs Jobs Central Government Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment