/tamil-ie/media/media_files/uploads/2018/11/higher-education-23.jpg)
SSC released 11271 vacancies for Combined Graduate Level Examination 2018 : மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) 2020-21 கல்வி அமர்வுக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவனையை வெளியிட்டிருந்தது. இந்த தேர்வு அட்டவணை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.
2019ம் ஆண்டு கலையுலகம் இழந்த நட்சத்திரங்கள்
இது குறித்த மேலும் விவரங்களுக்கு
2018ம் ஆண்டிற்கான எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (நிலை -III) தேர்வு கடந்த டிசம்பர் 29, 2019 அன்று நடத்தப்பப்டது. இதற்கான நிலை -I மற்றும் நிலை II தேர்வுகள் ஏற்கனவே நடத்தபப்ட்டு, முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில்,மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி 2018 அளவு பணிக்கான தற்காலிக காலி பணியிடங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அலுவலர், உதவி பிரிவு அலுவலர், உதவியாளர், உதவி / கண்காணிப்பாளர், வருமான வரி ஆய்வாளர், ஆய்வாளர் (மத்திய கலால்), ஆய்வாளர் (தடுப்பு அலுவலர்), உதவி அமலாக்க அலுவலகம், துணை ஆய்வாளர்கள், ஆய்வாளர், இளநிலை புள்ளிவிவர அலுவலர், கணக்காளர் / ஜூனியர் கணக்காளர், மூத்த செயலக உதவியாளர் / மேல் பிரிவு எழுத்தர் என பல்வேறு துறைகளில் 11271 காலி பணியிடங்களாக வெளியிட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/12/ssc-1-300x212.png)
/tamil-ie/media/media_files/uploads/2019/12/ssc-2-300x199.png)
முழு அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
எஸ்எஸ்சி மற்ற தேர்வுகள் குறித்து:
2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு (நிலை -1) 2020ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி முதல் 27ம் தேதியும், நிலை II தேர்வு ஜூன் 28, 2020 அன்றும் நடத்தப்படும்.
2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (நிலை -1) தேர்வு 2020ம் ஆண்டு மார்ச் 2 முதல் 11 வரை நடத்தப்படுகிறது. நிலை -2 மற்றும் நிலை -3 தேர்வுகள் 2020ம் ஆண்டு ஜூன் 22 முதல் ஜூன் 25, வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us