SSC MTS Result 2019 @ssc.nic.in: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய பல்துறை பணியாளர் தேர்வு முதல் தாள் (SSC MTS Tier 1 Result 2019) இன்று வெளியாகிறது. தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளும் முறை இங்கு தரப்படுகிறது.
Advertisment
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் SSC MTS Tier 1 தேர்வை ஆகஸ்ட் 2-ம் தேதி நடத்தியது. நாடு முழுவதும் 38.58 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பம் செய்தனர். 19.18 லட்சம் பேர் தேர்வு எழுதினர். ஆன்ஸ்வர் கீ கடந்த செப்டம்பரில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியானது.
லட்சக்கணக்கானோர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் 25-ல் வெளியாவதாக இருந்தது. பின்னர் நவம்பர் 5-ம் தேதி வெளியிடுவதாக தேர்வாணையம் அறிவித்தது. அதன்படி இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
SSC MTS Tier 1 Result 2019, How to check: ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தேர்வு முடிவுகளை பார்க்கும் முறை
1. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதள முகவரியான ssc.nic.in -ஐ தேடி, அதில் நுழையவும்.
2. இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் SSC MTS Paper 1 தேர்வு முடிவுக்கான லிங்கை க்ளிக் செய்யவும்.
3. புதிதாக வெளிப்படும் பக்கத்தில் உங்களது பாஸ்வேர்ட் கொடுத்து, திறக்கவும்.
4. இப்போது ரிசல்ட் கிடைக்கும். தேவைக்கு டவுன்லோடு செய்து கொள்ளவும்.
இதில் தேர்வாகிறவர்கள் நவம்பர் 24-ல் நடைபெறும் SSC MTS Paper 2-க்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.