எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் (Staff Selection Commission), கடந்த பிப்ரவரி 5 முதல் 8-ம் தேதி வரை ஸ்டெனோகிராஃபருக்கான கிரேட் சி மற்றும் டி தேர்வை நடத்தியது. நாடு முழுவதும் 208 தேர்வு மையங்களில் இத்தேர்வை விண்ணப்பதாரர்கள் எழுதினர்.
4,36,910 பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், 1,85,357 பேர் மட்டுமே எழுதினர். அதாவது 42.43 சதவீதத்தினரே தேர்வில் கலந்துக் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது எஸ்.எஸ்.சி.
இந்நிலையில் இதன் முடிவுகள் வரும் ஏப்ரல் 15, 2019 அன்று வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முடிவைப் பெற...
எஸ்.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ தளமான ssc.gov.in தளத்தை அணுகவும்.
SSC stenographer results என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
அதில் கட் ஆஃபை படித்து தெரிந்துக் கொள்ளவும்.
ஹோம் பேஜிற்கு திரும்பவும் சென்று, லாக் ஆன் செய்துக் கொள்ளவும்.
உங்களுடைய பதிவெண்ணைக் குறிப்பிட்டு முடிவைப் பார்க்கவும்.
தவிர, டெல்லி போலீஸில் எஸ்.ஐ பணிக்கான தேர்வையும் எஸ்.எஸ்.சி அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 12 முதல் 18, 2019 வரை இதற்கான தேர்வு நடக்கிறது. மேலும் விரங்களுக்கு ssc.nic.in. தளத்தை அணுகவும்.