பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வந்தாச்சு - டவுன்லோடு செய்ய இதோ வழிமுறை
SSLC exam hall ticket : 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஜூன் 4ம் தேதி பிற்பகல் முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூன் 15-ம் தேதி 10 மற்றும் 11-ம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஜூன் 18-ம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மீதமுள்ள தேர்வுகள் நடக்கின்றன.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,825 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 8865 பள்ளிகள் துணைத் தேர்வு மையங்களாகவும் செயல்பட உள்ளன. இதனால் மொத்தம் 12690 தேர்வு மையங்களில் 9.7 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுத உள்ளனர்.
இந்நிலையில் 10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியாகி உள்ளது. மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்யும் முறை
இணையதளத்தின் முகப்புப்பக்கத்தில், HALL TICKET என்ற பிரிவை தெரிவு செய்யவும்
பின்வரும் திரையில், தேர்வு எண்ணை பதிவிடவும்
அடுத்த கட்டத்தில் பிறந்த தேதியை பதிவிடவும்
பின் சப்மிட் பட்டனை அழுத்தவும்
திரையில், ஹால் டிக்கெட் தோன்றும். அது உங்களுடையதுதானா என்று சோதனை செய்து அதனை டவுன்லோடு செய்து கொள்ளவும்.
தேர்வர்கள், தேர்வு தொடர்பான மற்ற விபரங்களை அறிய ஹால் டிக்கெட்டின் கீழ்ப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவர்கள், நாளை ( ஜூன் 4ம் தேதி) பிற்பகல் முதல் பள்ளி தலைமை ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டு பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தனித்தேர்வர்களும் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil