எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட் 2025: அதிரடி காட்டிய சிவகங்கை... 98.31% தேர்ச்சியுடன் முதலிடம்

இன்று (மே 16 )வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் சிவகங்கை மாவட்டம் 98.31% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது.

இன்று (மே 16 )வெளியான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் சிவகங்கை மாவட்டம் 98.31% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
School Students Writing Exam

2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு 10ஆம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள் இன்று (மே 16, 2025) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Advertisment

தமிழ்நாடு இடைநிலைப் பள்ளி இறுதி வகுப்பு (SSLC) அல்லது 10ஆம் வகுப்பு தேர்வு 28.03.2025 முதல் 15.04.2025 வரை நடைபெற்றது. 16.05.2025 ஆன இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 8,71,239 மாணவர்கள் மொத்தம் தேர்வு எழுதினர். அதில் 4,35,119 மாணவியர்களும் 4,36,120 மாணவர்களும் தேர்வு எழுதினர். 15,652 தேர்வுக்கு வரவில்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,94,264 ஆகும். 

தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெற்றது. தேர்வு முடிவுகள் மே 16 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,71,239 ஆகும். அதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,35,119 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 4,36,120 ஆகும்.  இதில் தேர்வுக்கு வருகை புரியாதவர்கள் 15,652 பேர் ஆவர். இந்தாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம்  93.80% ஆகும். 

பாடம் வாரியாகப் பார்க்கும்போது ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். கணிதத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ளது.

Advertisment
Advertisements

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் 98.31%, விருதுநகர் 97.45%, தூத்துக்குடி 96.76%, கன்னியாகுமரி 96.66% மற்றும் திருச்சி 96.61% ஆகவும் உள்ளது. சிவகங்கை மாவட்டம் அதிகபட்ச தேர்ச்சி சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 

இந்த ஆண்டு ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த மாணவன் மணீஷ் குமார் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் தமிழில் 98 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், மற்ற அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய சிறைவாசிகளில் மொத்தம் 237 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில், 230 பேர் (97.05%) தேர்ச்சி பெற்றுள்ளனர். மதுரை மத்திய சிறையில் தேர்வு எழுதிய அனைத்து சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 56 ஆண்கள் மற்றும் 9 பெண்கள்  என 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.  

2025ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் மாவட்ட வாரியான தேர்ச்சி சதவீதத்தை பார்ப்போம். அதிக தேர்ச்சி பெற்ற முதல் ஐந்து மாவட்டங்களாக சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. 

சிவகங்கை: 98.31%
விருதுநகர்: 97.45%
தூத்துக்குடி: 96.76%
கன்னியாகுமரி: 96.66%
திருச்சி: 96.61%
 
வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் கடைசி இடத்தில் உள்ளன. 

வேலூர்: 85.44%
கள்ளக்குறிச்சி: 86.91%
செங்கல்பட்டு: 89.82%
சென்னை: 90.73%
ராணிப்பேட்டை: 91.30%

ஒட்டுமொத்த மாநில தேர்ச்சி சதவீதம் 93.80% ஆகும். 

2025ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள் இன்று (மே 16, 2025) வெளியிடப்பட்டுள்ள நிலையில், மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம், மறு மதிப்பீடு மற்றும் நகல் விண்ணப்பம் தொடர்பான தகவல்களை பார்ப்போம்.

மதிப்பெண் சான்றிதழ் பதிவிறக்கம்:

தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் பதிவு எண் (Registration Number) மற்றும் பிறந்த தேதியைப் (Date of Birth) பயன்படுத்தி தற்காலிக (Provisional) மதிப்பெண் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களை மாணவர்கள் DigiLocker செயலி அல்லது இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக, மாணவர்கள் தங்கள் ஆதார் எண்ணை DigiLocker கணக்குடன் இணைத்திருக்க வேண்டும்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழின் நகலை மாணவர்கள் எதிர்கால பயன்பாட்டிற்காக சேமித்து வைத்துக்கொள்வது நல்லது. அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் சில நாட்களுக்குப் பிறகு அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். மாணவர்கள் தங்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகி அதைப் பெற்றுக்கொள்ளலாம்.

மறு மதிப்பீடு / மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்:

தங்கள் மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மாணவர்கள் மறு மதிப்பீடு அல்லது மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் (TNDGE) விரைவில் வெளியிடப்படும்.

மறு மதிப்பீடு என்பது மாணவர்களின் விடைத்தாள்கள் மீண்டும் ஒருமுறை மதிப்பீடு செய்யப்படும். மறுகூட்டல் என்பது மதிப்பெண்கள் சரியாக கூட்டப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கப்படும். விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் மற்றும் கடைசி தேதி போன்ற விவரங்கள் TNDGE வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படும்.

விடைத்தாள் நகல் பெறுதல்:

மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், முதலில் தங்கள் விடைத்தாளின் நகலைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகு, அதில் ஏதேனும் குளறுபடிகள் இருப்பதாக கருதினால், மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப முறையும், கட்டண விவரங்களும் TNDGE வெளியிடும் அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிடப்படும்.

துணைத் தேர்வுகள்:

ஒரு சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் நடத்தப்படும். இந்தத் தேர்வுகள் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணைத் தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் TNDGE விரைவில் வெளியிடும். 

மதிப்பெண் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான வசதி தற்போது உள்ளது. மறு மதிப்பீடு, நகல் விண்ணப்பம் மற்றும் துணைத் தேர்வுகள் குறித்த விரிவான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். 

10th Exam Exam Result

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: