எஸ்.எஸ்.என் கல்லூரியில மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
தமிழகத்தின் தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான எஸ்.எஸ்.என் கல்லூரியில், மேனேஜ்மெண்ட் கோட்டா மூலம் சேர்க்கை பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழகத்தில் உள்ள தலைசிறந்த பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளது, எஸ்.எஸ்.என் எனப்படும் ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி ஆகும். தனியார் கல்லூரிகள் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதும் இந்தக் கல்லூரி தான். சென்னையில், சி.இ.ஜி, எம்.ஐ.டி கல்லூரிகளுக்கு அடுத்தப்படியாக டாப்பர்கள் தேர்வு செய்யும் கல்லூரி இது தான்.
இந்தநிலையில், எஸ்.எஸ்.என் பொறியியல் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் எப்படி சேர்க்கை பெறுவது என்பதை கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
அதன்படி, எஸ்.எஸ்.என் கல்லூரியில் இரண்டு வழிகளில் சேர்க்கைப் பெறலாம். ஒன்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரலாம். இதற்கு கட் ஆஃப் அதிகம் தேவைப்படும். மறுபுறம் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சேரலாம். ஆனால் இதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. இந்த நுழைவுத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்.
Advertisment
Advertisements
இந்த நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை வழங்கப்படும். தலைசிறந்த கல்லூரியில் படித்து நல்ல வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“