இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு, ஐ.ஐ.டி மெட்ராஸ் முதல்முறையாக ஐ.ஐ.டி.,களுக்கிடையேயான கலாச்சாரக் கூட்டத்தை நடத்துகிறது, இதில் நாட்டிலுள்ள 23 ஐ.ஐ.டி.,களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர். 'இன்டர்-ஐ.ஐ.டி கலாச்சார சந்திப்பு 5.0' நிகழ்வில் சுமார் 3,200 மாணவர்கள் பங்கேற்கின்றனர் மற்றும் ஐ.ஐ.டி சென்னை வளாகத்தில் ஜனவரி 9 முதல் 11 வரை நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு ஐ.ஐ.டி.,யால் நடத்தப்படும் கலாச்சாரக் கூட்டம், கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. அனைத்து ஐ.ஐ.டி.,களில் இருந்தும் மாணவர்கள் பல்வேறு கிளப்களால் நடத்தப்படும் நிகழ்வுகளுடன் கலாச்சார கலைகளைக் கொண்டாடுவதற்காக கூடுகிறார்கள்.
இதையும் படியுங்கள்: கேம்பஸ் இண்டர்வியூ-வில் அசத்தும் ஐ.ஐ.டி மெட்ராஸ்; கோடிகளில் சம்பளம் பெறும் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள்
போட்டியின் நிறைவைக் குறிக்கும் வகையில் நிறைவு விழா ஜனவரி 11, 2023 அன்று நடைபெறும்.
இந்த நிகழ்வின் குறிக்கோள், இந்தியாவில் உள்ள சில பிரகாசமான மனதுடையவர்கள் ஐ.ஐ.டி.,யின் கலாச்சாரத் துறையை வளப்படுத்தும் ஏராளமான நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும் தனித்துவத்தை அடையவும் அனுமதிப்பதாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil