சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு standard and basic என இரண்டு நிலைகளில் கணிதப் பாடத்தை அறிமுகப்படுத்தியது. இதைதொடர்ந்து தற்போது 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு இதே போன்று அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களிலும் 2 நிலைகளை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 2026-27 கல்வியாண்டில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் இந்த பாடங்களை இரண்டு நிலைகளில் வழங்க முடிவு செய்யப்பட்டது. மிக உயர்ந்த முடிவெடுக்கும் அதிகாரமாக செயல்படும் வாரியத்தின் ஆளும் குழு இறுதி அனுமதியை வழங்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டக் குழுவின் சமீபத்திய கூட்டத்தில் இந்த பாடங்களை இரண்டு நிலைகளில் வழங்க முடிவு செய்யப்பட்டது. மிக உயர்ந்த முடிவெடுக்கும் அதிகாரமாக செயல்படும் வாரியத்தின் ஆளும் குழு இறுதி அனுமதியை வழங்க வேண்டும்.
இந்த மாற்றத்திற்கான கட்டமைப்பு, உயர்நிலைப் படிப்பைத் தேர்வுசெய்யும் மாணவர்கள் வெவ்வேறு படிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவார்களா அல்லது வேறு தேர்வை எடுப்பார்களா என்பது உட்பட இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஆதாரங்களின்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) வெளியிடும் புதிய பாடப்புத்தகங்களுக்காக சிபிஎஸ்இ காத்திருக்கிறது, இது புதுப்பிக்கப்பட்ட தேசிய பாடத்திட்ட கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி மற்றும் வகுப்பறை பாடத்திட்டம் குறித்து மையத்திற்கு ஆலோசனை வழங்கும் என்சிஇஆர்டி, கடந்த ஆண்டு 1 மற்றும் 2 ஆம் வகுப்புகளுக்கும், இந்த ஆண்டு 3 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கும் புதிய பாடப்புத்தகங்களை வெளியிட்ட நிலையில், 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் மேலும் சில வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன் வெளிடும் என எதிர்பார்க்கப்பபடுகிறது.
9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியலை இரண்டு நிலைகளில் வழங்குவதன் நோக்கம், 11 ஆம் வகுப்பில் இந்தப் பாடங்களை மேற்கொள்வதற்கு முன், இந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை மேம்பட்ட நிலையில் படிக்க அனுமதிப்பதாகும்.
ஆங்கிலத்தில் படிக்க: CBSE plan: Pick from standard or advanced Social Science and Science in Classes 9-10
அதோடு மாணவர்கள் எதை படிக்க விரும்புகிறார்கள் standard அல்லது basic படிப்பு என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க ஒரு குறிப்பிட்ட காலக்கெடு வழங்கப்படலாம், அந்த காலத்திற்குள் அவர்கள் எந்த வகையான பாடப்பிரிவு என்பதை தேர்வு செய்து சொல்ல வேண்டும்.
அதே நேரம் advanced level தேர்ந்தெடுக்கும் போது கூடுதலாக சில பாடங்கள் படிக்க வேண்டும். கூடுதல் பயிற்சிகள் அல்லது கூடுதல் கற்றல் நேரங்களைக் கொண்ட அதே பாடப்புத்தகங்களாக இருக்கும். அதே போல் தேர்வு வினாத் தாள்களும் தனித் தனியாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.