சென்னை ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைகளுக்கு ஐந்தாண்டுகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் அளித்து உள்ளது.
போதிய பேராசிரியா்கள் வருகை இல்லாதது, ஆதாருடன் இணைந்த பயோ மெட்ரிக் வருகைப் பதிவிலுள்ள குறைபாடுகள், சிசிடிவி கேமராக்கள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருச்சி அரசு கிஆபெ விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்து நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
இதனால் 500 எம்.பி.பி.எஸ். மருத்துவ இடங்களுக்கு நிகழாண்டில் கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் எழுந்தது.
இதையடுத்து, இந்த கல்லூரிகளில் உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு ஆணையத்திற்கு, அரசு தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சென்னை ஸ்டான்லி, தர்மபுரி ஆகிய மருத்துவ கல்லுாரிகளுக்கு ஐந்தாண்டுக்கு அங்கீகாரம் அளித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஓராண்டு அனுமதி பெற்றிருந்த கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லுாரிக்கும் ஐந்தாண்டுகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
திருச்சி மருத்துவ கல்லுாரிக்கான அங்கீகாரம் தொடர்பான அறிவிப்பு இதுவரை வரவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“