‘இரண்டாண்டு கடின உழைப்பு’ நீட்டில் முதல் முறையிலே 700க்கும் அதிகமாக மார்க் குவித்த தமிழ்நாடு மாணவர்கள்!

700 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 6 மாணவர்களும், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயாராகிவந்ததாகக் கூறுகின்றனர்

16 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் 2021 தேர்வின் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. மாணவர்களின் மின்னஞ்சலுக்கு நேரடியாக நீட் முடிவுகள் அனுப்பப்பட்டது. மேலும், என்டிஏயின் அதிகாரப்பூர்வ தளத்திலும் நீட் முடிவுகளை மாணவர்கள் காணலாம். குறிப்பாக, இம்முறை மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

700க்கும் அதிகமாக மார்க் பெற்ற 6 பேர்

அந்த வகையில், நீட் தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பெற்ற விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதல் முறையிலே தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். 700மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த 6 மாணவர்களும், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வுக்குத் தயாராகிவந்ததாகக் கூறுகின்றனர். அதில், ஒருவர் மட்டுமே தனியாக நீட் பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார்.

நீட்டில் அகில இந்திய அளவில் 23 ஆம் இடம் பிடித்த கீதாஞ்சலி, 30ஆம் இடம் பிடித்த எம்.பிரவீன் ஆகியோர் 710 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். இருவரும், நாமக்கல் பயிற்சி வகுப்பில் படித்தவர்கள் ஆவர்.டிஏவி மொகப்பேயர் பள்ளியைச் சேர்ந்த எஸ்கே. பிரசெஞ்சிதன் தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் ஆவர். இதில், தஞ்சாவூரை சேர்ந்த அரவிந்த், சொந்தமாகப் படித்து 43 ஆம் இடத்தை பெற்று அசத்தியுள்ளார்.

இரண்டாண்டு பயிற்சி

நீட் தேர்ச்சி குறித்து பேசிய பிரசெஞ்சிதன், ” 11 ஆம் வகுப்பிலிருந்து நீட் தேர்வுக்கு நான்கு மாதங்கள் முன்பு வரை கடுமையாக படித்தேன். NCERTயின் அனைத்து பாடப்புத்தகங்களை முழுமையாகப் படித்தேன்.

இறுதியாக, தேர்வுக்கு முன்பிருந்த மூன்று மாதங்களும் தினந்தோறும் 3 மணி நேரம் மாடல் தேர்வு பயிற்சியை மேற்கொண்டேன். இது எனது வேகத்தையும், சரியான விடையளிக்கப் பெரிதும் உதவியது” என்றார். இந்த மாணவர், ஆகாஷ் நிறுவனத்தின் வகுப்புகளிலும் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசுகையில், “மாணவர்கள் எந்தப் பாடத்தையும் குறைத்து மதிப்பிடக் கூடாது, எல்லாவற்றுக்கும் நன்றாகத் தயாராக வேண்டும், உயிரியலில் நல்ல மதிப்பெண் எடுத்தால், நிச்சயமாக மற்றவர்களை விட அதிக மதிப்பெண்களை பெற முடியும். ஒவ்வொரு பாடத்திலும் பலவீனமான இடங்களைக் கண்டறிந்து அவற்றைச் பலமாக்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும்” என்றார். இவர் டெல்லி எய்ம்ஸில் படிக்க விருப்பம் தெரிவிக்கிறார்.

முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களில் கவனம்

அரவிந்த் பேசுகையில், ” 11 ஆம் வகுப்பிலிருந்தே நீட் தேர்வுக்காக படித்து வந்தேன். தேர்வுக்கு முன்பு, கடைசி மூன்று மாதங்களில் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களில் கவனம் செலுத்தினேன்” என்றார்.

வேலம்மாள் வித்யாலயா பள்ளி மாணவர் எம்.பி ஹயக்ரீவாஸ், நீட்டில் 705 மதிப்பெண்கள் பெற்று 56வது இடத்தைப் பெற்றுள்ளார்.

அவர் கூறுகையில், ” ஆசிரியர்களின் அறிவுறுத்தலும், நேரம் நிர்வாகமும் என்னைத் தேர்வில் சிறப்பாக செயல்பட உதவியது. தொடர்ந்து படிப்பது மற்றும் தேர்வுக்கு முன்பு பல தேர்வு பயிற்சிகளை மேற்கொண்டது பெரிதும் உதவியது. நான் இன்னும் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன் என்றார். இவர், எய்ம்ஸ் டெல்லி அல்லது ஜிப்மரில் சேர விரும்புவதாகத் தெரிவிக்கிறார்.

கடினமாக உழைத்தால் வெற்றி உங்களை தேடி என்பதற்கு உதாரணமாக இந்த மாணவர்கள் திகழ்கின்றனர்.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: State merit list in neet 2021 have cleared the test in their first attempt

Next Story
காவல் துறையில் பணி செய்ய வேண்டும் என்பது உங்கள் ஆசையா? இதோ அந்த வாய்ப்பு.Tamil Nadu Police Recruitment 2018
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com