பொறியியல் மாணவர்களுக்கு சவால்: சென்னை ஐஐடி முன்வைத்த போட்டி
இந்த ஸ்டேப் போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி குழுக்கள் திறமைகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல்,தங்களது யோசனைகளை நிஜ வாழ்க்கையில் நடைமுறைபடுத்தவும் ஐஐடி சாஸ்திரா முனைகிறது
சென்னை ஐஐடி மானவர்களால் ஆண்டுதோறும் நடத்தப்படும் தொழில்நுட்ப விழா சாஸ்திரா. ஐ.எஸ்.ஓ 9001: 2015 சான்றிதழ் பெற்ற நாட்டின் முதல் மாணவர்களால் நிர்வகிக்கப்பட்ட தொழிநுட்ப விழா என்ற பெருமையையும் சாஸ்த்ரா பெற்றுள்ளது. நாடு முழுவதும் கல்லூரி விழாக்களில் ஒரு டிரெண்ட்செட்டராக மாறியிருக்கிறது இந்த சாஸ்திரா. 2020ம் ஆண்டின் முதல் மாத தொடக்கத்தில் (3-6) சென்னை ஐஐடி-ல் சாஸ்திரா விழா நடக்க விருக்கிறது.
இந்த ஸ்டேப் போட்டி சாஸ்திர விழாவின் ஒரு முக்கிய அம்சமாகும். இந்த போட்டி கடந்த அக்டோபர் 10ம் தேதி தொடங்கி, டிசம்பர் 5ம் தேதி வரை நடைபெற்றது. செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா, இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் போன்ற உயர்தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி சமூக பிரச்சனகளை (தண்ணீர், அடிப்படைக் கல்வி, கழிவு மேலாண்மை ) தீர்ப்பதே இந்த போட்டியின் நோக்கமாகும்.
போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மாணவர் குழுக்கள் சாஸ்திர விழாவின் போது தங்கள் யோசனைகளை விளக்க வேண்டும். அதில் வெற்றி பெரும் மாணவர் குழுக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தங்கள் யோசனைகளை நிஜ வாழ்க்கையில் நடைமுறைபடுத்தவும் சாஸ்திரா முனைகிறது.
இந்த ஸ்டேப் போட்டியை TERI, Takshashila மற்றும் CEEW போன்ற சிந்தனைத் அமைப்புகள் ஆதரிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சி.ரங்கராஜன் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனத்தின் இயக்குனர் ஜி.ரகுராம் ஆகியோர் தங்கள் ஆதரவையும் இந்த போட்டிக்கு வழங்குகியுள்ளனர்.