/indian-express-tamil/media/media_files/2025/08/29/iit-chennai-tn-school-2025-08-29-17-38-09.jpg)
தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளிகளைச் சேர்ந்த 28 மாணவர்கள் ஐ.ஐ.டி சென்னையில் அனைவருக்கும் ஐ.ஐ.டி திட்டத்தின் கீழ் சேர்க்கைப் பெற்றுள்ளதாக மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வியாழக்கிழமை தெரிவித்தார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
இந்த நடவடிக்கை அரசு நடத்தும் பள்ளிகளில் கல்வியின் தரத்தையும், ஒரு மதிப்புமிக்க மத்திய நிறுவனத்தில் உயர்கல்வியைத் தொடர பின்தங்கிய மாணவர்களின் உறுதியையும் பிரதிபலிக்கிறது.
“தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தும் திட்டங்களின் துணையோடு அரசுப் பள்ளி மாணவச் செல்வங்கள் கல்வியில் உயரங்களை எட்டிப்பிடித்து சாதனை படைக்கிறார்கள். அவ்வகையில் அனைவருக்கும் ஐ.ஐ.டி திட்டத்தின் கீழ் நமது அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் ஐ.ஐ.டி சென்னை நிறுவனத்தில் இணைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். மாணவச் செல்வங்களுக்கு அன்பு வாழ்த்துகள்,” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவில் தெரிவித்தார்.
“இந்தப் புதிய பயணத்தைத் தொடங்கும் பிரகாசமான இளம் சாதனையாளர்களுக்கு” அமைச்சர் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அனைவருக்கும் ஐ.ஐ.டி சென்னை என்பது சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் உயர் கல்வி பெற ஊக்குவிப்பதற்காக மாநில அரசுக்கும் ஐ.ஐ.டி சென்னை நிறுவனத்திற்கும் இடையிலான ஒரு முயற்சியாகும். இது ஏப்ரல் 2023 இல் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது.
இந்த ஆண்டு, தரவரிசையில் முதல் 100 பேரில் ஆறு பேர் ஐ.ஐ.டி சென்னையைத் தேர்வு செய்தனர் - இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் - 2024 இல் இரண்டு பேர் மட்டுமே ஐ.ஐ.டி சென்னையில் சேர்க்கைப் பெற்றனர். கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையம் (JoSAA) வெளியிட்ட கவுன்சிலிங் தரவுகளின்படி, ஜே.இ.இ அட்வான்ஸ்டு (JEE Advanced) 2025 தரவரிசையில் முதல் 100 பேரில் 73 பேர் ஐ.ஐ.டி பம்பாய் தேர்வு செய்தனர். 2025 ஆம் ஆண்டில் முதல் 100 பேரில் 19 மாணவர்கள் ஐ.ஐ.டி டெல்லியை தேர்வு செய்தனர்.
2025 ஆம் ஆண்டில், ஐ.ஐ.டி சென்னை 237 மாணவிகளுடன் 1,124 இடங்களை ஒதுக்கியது. 23 ஐ.ஐ.டி.,களில் ஒதுக்கப்பட்ட மொத்த இடங்கள் இந்த ஆண்டு 18,188 ஆக இருந்தன, இதில் ஒன்பது சூப்பர்நியூமரரி டி.எஸ் இடங்கள், 11 சூப்பர்நியூமரரி வெளிநாட்டினர் /OCI/PIO (F) இடங்கள் மற்றும் 12 சூப்பர்நியூமரரி குறைந்தபட்ச கட்-ஆஃப் இடங்கள் அடங்கும். கூடுதலாக, 96 OCI/PIO (I) மாணவர்கள் (இந்திய நாட்டினராகக் கருதப்படுகிறார்கள்) இந்த ஆண்டு சேர்க்கை பெற்றனர்.
ஐ.ஐ.டி சென்னையில், பெண்களின் பிரதிநிதித்துவம் 2020 இல் 20.72 சதவீதமாகவும், 2021 இல் 20.26 சதவீதமாகவும், 2022 இல் 20.5 சதவீதமாகவும், 2023 இல் 20.5 சதவீதமாகவும், 2024 இல் 20.5 சதவீதமாகவும், 2025 இல் 21.09 சதவீதமாகவும் இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.