பிளஸ் 2 ரிசல்ட் வெளியீடு: சதம் அடித்த சாதனையாளர்கள்... பாட வாரியாகப் பட்டியல்!

இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முக்கிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை பற்றி பார்ப்போம்.

இன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் முக்கிய பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
cbse 12th results

2024-25 கல்வி ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 ஆம் தேதி முதல் தொடங்கி பல்வேறு பாடங்களுக்கு மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை சரியாக 9.15 மணிக்கு வெளியானது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள்  https://results.digilocker.gov.in/  மற்றும்  https://tnresults.nic.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக அறிந்துகொள்ளலாம்.

Advertisment

பொதுத்தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முக்கிய பாடப்பிரிவுகளில் 100 மதிப்பெண் பெற்று சதம் அடித்தவர்களின் எண்ணிக்கை பற்றி பார்ப்போம். 

  • தமிழ் பாடத்தில் 99.15% தேர்ச்சி பெற்றுள்ளனர், 135 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • இயற்பியலில் 99.22% தேர்ச்சி பெற்றுள்ளனர், 1,125 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • வேதியியலில் 98.99% தேர்ச்சி பெற்றுள்ளனர், 3,181 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • உயிரியலில் 99.15% தேர்ச்சி பெற்றுள்ளனர், 827 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • கணிதத்தில் 99.16% தேர்ச்சி பெற்றுள்ளனர், 3,022 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • தாவரவியலில் 99.35% தேர்ச்சி பெற்றுள்ளனர், 269 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • விலங்கியலில் 99.51% தேர்ச்சி பெற்றுள்ளனர், 36 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • கணிணி அறிவியலில் 99.73% தேர்ச்சி பெற்றுள்ளனர், 9,536 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • வணிகவியலில் 98.36% தேர்ச்சி பெற்றுள்ளனர், 1,624 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • கணக்குப் பதிவியலில் 97.36% தேர்ச்சி பெற்றுள்ளனர், 1,240 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • பொருளியலில் 98.17% தேர்ச்சி பெற்றுள்ளனர், 556 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • கணிணி பயன்பாடுகளில் 99.78% தேர்ச்சி பெற்றுள்ளனர், 4,208 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
  • வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியலில் 98.78% தேர்ச்சி பெற்றுள்ளனர், 273 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 26,887 ஆகும். அரசுப் பள்ளிகளில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2,853 ஆகும்.

Advertisment
Advertisements

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,05,472(96.70%) மற்றும் மாணவர்கள் 3,47,670(93.16%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

12th Exam Mark

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: