'கருணை மதிப்பெண்கள்' பெற்ற மாணவர்களுக்கான நீட் யு.ஜி (NEET UG) மறுதேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்ட பிறகு, இப்போது முதல் ரேங்க் பெற்ற பலர் உட்பட, 50க்கும் மேற்பட்ட நீட் 2024-தகுதி பெற்ற மாணவர்கள், சர்ச்சைக்குரிய தேர்வை ரத்து செய்வதிலிருந்து மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் (NTA) தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்க:
இந்த ஆண்டு மே 5 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட்-யு.ஜி தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற நியாயமற்ற செயல்களில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பிறரை விசாரித்து, அடையாளம் கண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய கல்வி அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் கோரியுள்ளனர் என செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
56 மாணவர்களின் புதிய மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுஷ் மற்றும் பிற தொடர்புடைய படிப்புகளுக்கான சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமை மூலம் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-யு.ஜி) நடத்தப்படுகிறது. நீட் யு.ஜி, 2024 மே 5 அன்று 4,750 மையங்களில் நடத்தப்பட்டது மற்றும் சுமார் 24 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகள் பல நகரங்களில் போராட்டங்களுக்கும், எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் வழிவகுத்தது.
தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுக்கள், மறுதேர்வு மற்றும் உயர்மட்ட விசாரணை ஜூலை 8ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், சித்தார்த் கோமல் சிங்லா மற்றும் 55 மாணவர்களின் புதிய மனு வழக்கறிஞர் தேவேந்திர சிங் மூலம் தாக்கல் செய்யப்பட்டது.
“நீட்-யு.ஜி தேர்வை மீண்டும் நடத்த வேண்டாம் என்று மாண்புமிகு நீதிமன்றம் எதிர்மனுதாரர்களுக்கு (மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை) மேலும் அறிவுறுத்தலாம்… ஏனெனில் மறுதேர்வு நேர்மையான மற்றும் கடின உழைப்பாளி மாணவர்களுக்கு நியாயமற்றது மற்றும் கடுமையானது மட்டுமல்ல, கல்வி உரிமை மீறலுக்கு வழிவகுக்கும் மற்றும் அரசியலமைப்பின் 14 வது பிரிவு (சமத்துவத்திற்கான உரிமை) மீறப்பட்டது,” என்று பி.டி.ஐ தெரிவித்துள்ளது.
நியாயமற்ற வழிகளைப் பின்பற்றும் தேர்வர்களைக் கண்டறிந்து தண்டிக்கவும், தேர்வு மையங்களைக் கண்டறிந்து, "NEET-UG 2024 தேர்வுகளுக்கான நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களில் ஏதேனும் சமரசம் செய்யப்பட்டால்" தகுந்த நடவடிக்கை எடுக்கவும், மத்திய அரசுக்கும் தேசிய தேர்வு முகமைக்கும் உத்தரவிடக் கோரி மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்கள்: பி.டி.ஐ
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“