தமிழ்நாட்டில் ஏப்ரல் 13 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறும்.

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறும்.

author-image
WebDesk
New Update
Tamilnadu

Summer vacation for schools in Tamil Nadu from April 13

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

Advertisment

இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப். 13 முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் ,தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி இறுதித் தேர்வுகள் ஏப்ரல் 2ம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெறும்.

ஏப்ரல் 13ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது.

Advertisment
Advertisements

மேலும், ஆசிரியர்கள் ஏப்ரல் 19 அன்று நடைபெற உள்ள 18வது மக்களவைத் தேர்தல் சார்ந்த பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து தேர்தல் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 23 முதல் ஏப்ரல் 26 வரையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான (2024-2025) மாணவர்கள் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 26 அன்று இக்கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்’, என, பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: