தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, முதுகலை (NEET PG) 2024 தேர்வு தொடர்பான மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி மனோஜ் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஜே.பி. பர்திவாலா ஆகியோர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மதிப்பெண்கள், விடைத்தாள்கள் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை நார்மலைஷேசன் செய்வது தொடர்பான வழக்கை இன்று விசாரித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: ‘Very unusual’: Supreme Court questions change in NEET PG 2024 pattern
நீட் முதுகலை தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள், மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரிய (NBEMS) முடிவுகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் நார்மலைஷேசன் செயல்முறை குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். இந்த மனு செப்டம்பர் 7ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டு, செப்டம்பர் 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவின் மூலம், தேசிய தேர்வு வாரியம், நீட் பி.ஜி ஆன்சர் கீ, பதில் தாள்கள், சாதாரண மற்றும் நார்மலைஷேசன் மதிப்பெண்கள் மற்றும் அனைத்து ஷிப்ட்களின் நார்மலைஷேசன் செய்யப்பட்ட முடிவுகளை வெளியிட வேண்டும் என்று மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த நீட் பி.ஜி விடைத்தாள்கள், வினாத்தாள்களை வெளியிடுவது வழக்கமான நடைமுறையாக மாற வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அனைத்து கவலைகளும் தீர்க்கப்படும் வரை கவுன்சிலிங் செயல்முறையை நிறுத்தி வைக்குமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூத்த வக்கீல் விபா தத்தா மகிஜா மற்றும் வழக்கறிஞர் தன்வி துபே ஆகியோரின் சமர்ப்பிப்புகளை பெஞ்ச் கவனத்தில் எடுத்துக்கொண்டு, 'தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்' தேர்வு முறை மாற்றம் குறித்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியது.
"ஒரு தரப்படுத்தப்பட்ட அணுகுமுறை இருக்க வேண்டும்," என்று மகிஜா கூறினார் மற்றும் தேர்வுகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதைக் கண்டறிய எந்த விதிமுறைகளும் இல்லை என்று கூறினார். "எல்லாமே ஒரே தகவல் குறிப்பேட்டைச் சார்ந்தது, அதை அதிகாரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றலாம்," என்றும் மகிஜா கூறினார். தேசிய தேர்வு வாரியத்தின் வழக்கறிஞர், குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
“இது மிகவும் அசாதாரணமானது… தேர்வுகளுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு (தேர்வு முறை மாற்றப்பட்டது)… மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்,” என்று தலைமை நீதிபதி கூறினார். இந்த வழக்கு செப்டம்பர் 27 அன்று மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, நீட் முதுகலை தேர்வு வழக்கமான ஒரு ஷிப்ட் முறையில் நடத்தப்படாமல், இரண்டு ஷிப்ட்களில் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்பட்டது - முதலில் காலை 9 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, அடுத்தது மாலை 3:30 முதல் மாலை 7 மணி வரை. புதிய முறை நடைமுறையில் இருப்பதால், வாரியம் நார்மலைஷேசன் செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
நீட் பி.ஜி தேர்வுக்கான முடிவுகளைத் தயாரிப்பதற்காக, INI-CET உட்பட, ஆனால் அது மட்டும் அல்லாமல், ஒன்றுக்கு மேற்பட்ட ஷிப்டுகளில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளுக்கு எய்ம்ஸ் டெல்லியால் தற்போது பயன்படுத்தப்படும் செயல்முறையை தேசிய தேர்வு வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது" என்று தேசிய தேர்வு வாரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூறுகிறது.
ஒவ்வொரு ஷிஃப்ட்டுக்கான முடிவுகள் சாதாரண மதிப்பெண்கள் மற்றும் சதவீதங்களின் வடிவத்தில் தயாரிக்கப்படும், என்று தேசிய தேர்வு வாரியம் நார்மலைஷேசன் செயல்முறையை அறிவிக்கும் போது கூறியது. மொத்த மதிப்பெண்ணுக்கான ஏழு தசம இடங்கள் வரையிலான சதவீதங்கள் கணக்கிடப்படும். தகவல் குறிப்பேட்டில் வெளியிடப்பட்ட தேர்வின் திட்டத்தின்படி டை பிரேக்கிங் விதிகள் இருக்கும். தகவல் குறிப்பேட்டில் குறிப்பிடப்படவில்லை என்றால், வயதின் அடிப்படையில் வயதானவர்கள் டை பிரேக்கிங்கில் உயர் தரவரிசையில் இருப்பார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.