Advertisment

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஜாக்பாட்; ஹெச்.சி.எல் நிறுவன வேலை உறுதியுடன் டிகிரி படிக்க வாய்ப்பு; தகுதிகள் என்ன?

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் பட்டப் படிப்பு படிக்க வாய்ப்பு; பிளஸ் 2 முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்; தாட்கோ வழங்கும் அரிய வாய்ப்புக்கான தகுதிகள் இங்கே

author-image
WebDesk
New Update
tahdco hcl

12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பிரபல ஐ.டி நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு படிக்க தமிழ்நாடு அரசின் தாட்கோ நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

Advertisment

இது தொடர்பாக தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிர்வாக இயக்குநர் கே.எஸ். கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

"ஹெச்.சி.எல் நிறுவனத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பு (பி.எஸ்.சி கம்ப்யூட்டிங் டிசைனிங்,. பி.காம், பி.சி.ஏ, பி.பி.ஏ) படிக்க ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகி்ன்றன.

புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவன வேலைவாய்ப்புடன், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பிட்ஸ் பிலானி கல்லூரியில் பி.எஸ்.சி கம்ப்யூட்டிங் டிசைனிங் பட்டப்படிப்பு, தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ படிப்பு, அமிட்டி பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ, பி.பி.ஏ, பி.காம் படிப்பு, நாக்பூர் ஐ.ஐ.எம் நிறுவனத்தில் ஒருங்கிணைந்த மேலாண்மை பட்டப்படிப்பு படிக்கவும் வாய்ப்பு பெற்றுத்தரப்படும். 

மாணவர்கள் 2022 - 2023 அல்லது 2023 – 2024 ஆம் கல்வி ஆண்டில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2022 – 2023 ஆம் ஆண்டு படித்து முடித்திருந்தால் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணும், 2023 – 2024 ஆம் ஆண்டு படித்திருந்தால் 75 சதவீத மதிப்பெண்ணும் அவசியம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சி அளித்து நிரந்தர வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

தகுதியான மாணவர்கள் ஹெச்.சி.எல் நிறுவனம் நடத்தும் நுழைவுத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும். ஓராண்டு கால பயிற்சிக்கான செலவினத்தை தாட்கோ நிறுவனமே ஏற்றுக்கொள்ளும். பணியமர்த்தப்படுவோருக்கு ஆரம்ப ஊதியமாக ரூ.17,000 முதல் ரூ.20,000 வரை கிடைக்கும். பின்னர் திறமைக்கு ஏற்ப ரூ.50,000 முதல் ரூ.70,0000 வரை பதவி உயர்வு அடிப்படையில் பெறலாம். இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் மாணவர்கள் தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) பதிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

School Education Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment