பட்டயக்கணக்காளர் - இடைநிலை (Chartered Accountant – Intermediate) நிறுவன செயலாளர்- இடைநிலை (Company Secretary- Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்- இடைநிலை (Cost and Management Accountant – Intermediate) ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற விரும்பும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள் www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக பயிற்சி பெறுவதற்கு பதிவு செய்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்களுக்கு பட்டயக்கணக்காளர்-இடைநிலை (Chartered Accountant – Intermediate), நிறுவன செயலாளர் இடைநிலை (Company Secretary- Intermediate), செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் –இடைநிலை (Cost&Management Accountant – Intermediate) ஆகிய போட்டி தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சி பெற விரும்பும் மாணாக்கர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராகளாகவும், இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும், மாணாக்கர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
எனவே, தகுதியுள்ள மாணாக்கர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“